24 special

ஹனி டிராப்..! வசமாய் சிக்கிய விமானப்படை அதிகாரி !

air force officer
air force officer

இந்தியா : வெளிநாட்டு உளவாளிகள் இந்தியாவில் ஊடுருவுது தற்போதைய மத்திய அரசால் கடும்நடவடிக்கைகளால் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதையடுத்து பாகிஸ்தான் ஏஜெண்டுகள் புதிய உத்தியை கடந்த சிலவருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பெண்கள் மூலம் வலை விரித்து இந்திய ராணுவ வீரர்களை மடக்கும் செயலில் இறங்கியுள்ளனர்.


இந்த ஹனி டிராப்பில் கடந்த வருடம் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய விமானப்படை மற்றும் கடற்படை அதிகாரிகள் சிக்கியது பரபரப்பை கிளப்பியிருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள விமானப்படை நிர்வாக உதவியாளர் ஒருவர் பாகிஸ்தான் ஏஜெண்டுக்கு தகவல்களை விற்றதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள சுப்ரோடோ பூங்காவில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படை (IAF) ரெக்கார்டு அலுவலகத்தில் ஜிடியாக (நிர்வாக உதவியாளர்) பணிபுரிந்து வந்தவர் தேவேந்திர நாராயண் ஷர்மா(32). இவர் பாகிஸ்தானில் உள்ள பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அந்த பெண்ணுடன் பணியாளர்கள், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார். பகிர்ந்துகொண்ட ஆவணங்களுக்கு பணமும் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. 

மே 6 அன்று பல முக்கியமான ஆவணங்களை தனது வாட்சப் மூலம் நாராயண் ஷர்மா பகிர்ந்துள்ளார். டெல்லி காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நாராயண் அலுவலகத்தில் இருக்கும்போது அவரது கணினியை சோதனையிட்டனர். சோதனையில் அவர் தனது கணினிகள் மற்றும் பிற கோப்புகளில் இருந்து முக்கிய ஆவணங்களை கசியவிட்டது தெரியவந்தது.

இந்திய விமானப்படைக்கு கிடைத்த புகாரின் பேரில் அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் சார்ஜெண்ட் கைதுசெய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. பொக்ரான் ராணுவத்தளத்தில் காய்கறி சப்ளை செய்யும் ஒருவர் ராணுவ வீரர் ஒருவரிடம் பணத்தை கொடுத்து முக்கிய ஆவணங்களை பெற்றதாக தெரியவந்த அடுத்த நாளே இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல கடந்த ஆண்டு ஜூலையில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐக்கு ரகசிய ஆவணங்களை விற்றதாக இரண்டு இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.