24 special

என்ன "திடீர்னு" இப்படி கேட்டு விட்டீர்கள்..!

rn ravi and ponmodi
rn ravi and ponmodi

அமைச்சர் பொன்முடியின் இந்தி பற்றிய  பேச்சுக்கள் இணையத்தில் மீண்டும் விவாதத்தை உண்டாக்கிய நிலையில் தற்போது அது குறித்து எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் எழுப்பிய கேள்வி பேசுபொருளாக மாறி இருக்கிறது.


இந்தி படித்தவன் பானி பூரி விற்கிறான் என்றால் அமெரிக்காவில் ஆங்கிலம் தெரிந்தவன் பிச்சை எடுக்கிறான் எனவே ஆங்கிலத்தை அதனோடு ஒப்பிட முடியுமா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- வட மாநிலத்தவர்கள் ஹிந்தி கற்றுக் கொண்டு என்ன செய்கிறார்கள்? இங்கே வந்து பானிப்பூரி கடை போடுகிறார்கள் என அமைச்சர் பொன்முடி சொல்கிறார்..சரி,இங்கிலாந்து - அமெரிக்காவில் எல்லோரும் இங்லீஷ்தான் பேசறான்.

பிறகு பிச்சை எடுப்பவர்கள் தொடங்கி அடிமட்ட வேலை செய்யும் எல்லோரும் அதை பேசுபவர்களாகவே உள்ளார்கள்? இங்லீஷ் படித்தால் இதுதான் நிலை என்று பேச முடியுமா? உலகம் முழுக்கவும்,இந்தியா முழுக்கவும் பிழைப்புக்காக சென்ற எல்லா தமிழரும்,சுந்தர் பிச்சையாகவும்,அப்துல் கலாமாகவுமா அமர்ந்துள்ளார்கள்?

மும்பை,போபால்,அகமதாபாத் என எங்கும் தமிழர்கள் உள்ளார்கள்..அதில் பலர் கூலி வேலை செய்பவர்கள் ம.பியில் வேலை செய்யும் தமிழர்களுக்கு ரேஷன் கார்டு வேண்டும் எங்களுக்கு  இங்கே சிரமமாக உள்ளது என கேட்டு, அதை பாஜக அரசு நிறைவேற்றிக் கொடுத்தது.

ஆக,எந்த வேலை செய்வதும் இழிவல்ல..திருடுவது,கொலை செய்வதுதான் இழிவு.உழைத்து பிழைப்பது இழிவல்ல,அதை ஒரு மொழிக்காரன் மட்டுமே செய்கிறான் நானெல்லாம் பண்ணையார் தெரியுமா! பிறப்பிலேயே என்று பேசுவதுதான் மேட்டிமைவாதம்..

இந்தியாவில் மிகப்பெரிய வணிகர்கள்,தொழில் முனைவோர்கள் வடஇந்தியர்கள்தான்.'வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது' அம்பானி - டாடா - அதானி என்று எப்போதும் கதறுவது யார்?  இங்கே இருந்தால் நீ ஆரியன்,தெலுங்கன்,மலையாளி என்று வசைபாடுவது.

ஆனால் இவர்களே வெளியே போய் சுந்தர் பிச்சை போன்றோ அல்லது யார் போலவோ உலகத்தில் வென்றுவிட்டால் அவர்கள் தமிழர்கள் என்று போலிப் பெருமிதம் கொள்வது இதை எத்தனை நாள் செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளப் போகிறோம் என கேள்வி எழுப்பி இருக்கிறார் சுந்தர் ராஜ சோழன்.