சென்னை பல்லாவரம் தொகுதியில் சேர்ந்த திமுக எம்எல்ஏ கருணாநிதி அவர்களின் மகன் ஆண்ரோ மற்றும் மருமகள் மெர்லீனா இருவரும் திருவான்மியூர் சவுத் அவன்யூ பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் வீட்டில் வேலை செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநரங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த 18 வயது ரேகா என்ற இளம் பெண் வந்துள்ளார். தன் குடும்ப சூழ்நிலை காரணமாக ரேகா என்ற பட்டியலின பெண் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகன் வீட்டில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு ஆண்ட்ரோ மற்றும் மெர்லினா பேசியபடி சம்பளம் கொடுக்காமலும் மாறாக ரேகாவை அவர்கள் இருவரும் துன்புறுத்தியும் வேலை வாங்கி உள்ளனர். அதாவது ஜாதி ரீதியிலும் ஆபாசமாகவும் இளம்பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளனர். அதோடு ரேகாவின் உடலில் ஆங்காங்கே சூடு வைக்கப்பட்டுள்ளதாகவும் தலை, முகம், கை, கால் என பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானது.
அதுமட்டுமின்றி திமுக எம்எல்ஏவான மகன் வீட்டில் தனக்கு நடந்த கொடூரம் குறித்தும் தான் சந்தித்த சித்திரவதைகள் குறித்தும் அங்கு பணியாற்றிய ரேகா என்ற இளம் பெண் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதனை அடுத்து கடந்த 18 ஆம் தேதி நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் ரேகா இது தொடர்பாக புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் நிலையம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகள் அண்ட்ரோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. வழக்குப்பதிவை அடுத்து காவல் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டதை அறிந்த திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் தலைமறைவாகினர். இப்படி புகார் அளிக்கப்பட்டதை அடுத்து திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகன் தலைமறைவாகியது திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து திமுக எம்எல்ஏ கருணாநிதியும் என் மகனுக்கு திருமணமாகி திருவான்மியூரில் தனியாக வசிக்க ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது, இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும் அங்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது என்றும் கூறி இதில் சம்பந்தப்பட்டிருக்கும் என் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதும் இணையத்தில் வைரலானது.
அதோடு தலைமறைவான ஆண்ட்ரோ மற்றும் மெர்லினாவை தேடும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தபொழுது இருவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது ஆனால் இடையில் இரண்டு தருணங்களில் மட்டும் இருவரது செல்போனில் இருந்து சில வீடியோக்கள் பதிவிடப்பட்டதாகவும் அப்பொழுது செல் போன் ஆன் செய்யப்பட்டதை வைத்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆந்திராவில் அவர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து ஆந்திரா விரைந்து சென்ற தனிப்படை, அப்பொழுது ஆந்திரா தமிழ்நாடு எல்லையில் உள்ள பள்ளி கொண்டா பகுதியில் ஆண்ட்ரோ மற்றும் மெர்லின் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதற்கிடையில் இந்த புகாரில் நடவடிக்கைகள் தாமதமாக்கப்பட்டதாகவும் தலைமறைவாகி வீடியோ அனுப்பும் அளவிற்கு குற்றவாளிகள் தைரியம் படைத்தவர்களாக உள்ளனர் காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இது குறித்த எந்த தகவலும் தெரியாமலா இருந்திருக்கும் என்ற விமர்சனங்களும் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.