24 special

கொங்கு பகுதியில் திமுகவிற்கு ஏற்பட்ட ஷாக் மொத்தமும் போகப்போவுதாமே..?

annamalai, udhayanithi
annamalai, udhayanithi

தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நீலகிரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களை உள்ளடக்கியதை கொங்கு மண்டலம். இந்த பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் கோட்டையாக இருந்தது, ஆனால் இப்பகுதியில் திமுக எந்த வித நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அதனை தனது ஊழல் சம்பாத்தியத்தை ஏற்படுத்தும் மண்டலமாகவே பார்த்து வந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து கரூர், சேலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளை திமுக அரசு தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி வந்ததும் செய்திகளில் வெளியாக திமுக மீது இருந்த அதிர்பதியை மேலும் அதிகப்படுத்தியது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் மேற்கொண்டு வந்த நடைபயணம் கொங்கு மண்டலத்தையும் அடைந்தது அப்பொழுது திமுகவின் கோட்டைக்குள் அண்ணாமலை நுழைகிறார் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கிடைத்து வரவேற்பை விட அண்ணாமலைக்கு கொங்கு மண்டலம் கொடுத்த வரவேற்பு பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருந்தது. இதன் மூலம் பாஜக பக்கம் கொங்கு மண்டலம் சற்று சாய்ந்து விட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். 


அதே சமயத்தில் இப்பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் மத்தியிலும் அடிக்கடி சச்சரவுகள் மற்றும் பிரச்சனைகள் நிலவி வருவதும் அதற்கு கட்சி தலைமை பெருமளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் வந்ததும் திமுக கட்சி நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது அதுமட்டுமின்றி இங்கு வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது திமுக கட்சியில் திறமை மற்றும் கடின உழைப்பாளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை என்றும் சீனியர் தொண்டர்களுக்கு கூட எந்த ஒரு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை அதனால் திமுகவைச் சேர்ந்த பாதி சீனியர்கள் கட்சியை விட்டுவிட்டு தற்போது தனது சொந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர் என்றும் கூறப்பட்டது. இப்படி திமுக மக்கள் மத்தியிலும் தன் கட்சி நிர்வாகிகள் மத்தியிலுமே கொங்கு மண்டலத்தில் பெரும் சரிவை கண்டுள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அப்பகுதியில் நடைப்பயணத்தை மேற்கொண்டு அங்கு இருக்கும் ஒவ்வொரு மக்களிடமும் உரையாற்றி அவர்களின் கோரிக்கைகளை ஏற்றது கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு பலத்த அடியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கொங்கு மண்டலம் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை அள்ளிக் கொடுக்கும் மண்டலமாக மாறலாம் என்று பேச்சுகளும் தற்போது அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு திமுக தனது ஆலோசனை கூட்டங்களை கடந்த 24 ஆம் தேதியில் இருந்து நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சேலத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்  உதயநிதி சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளில் பாஜக எப்படி வெற்றி வாய்ப்பை பெறலாம் அதற்கான சூழ்நிலைகள் எப்படி இங்கு நிலவ ஆரம்பித்தது, மேலும் நாடாளுமன்றத் தேர்தல்களில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் திமுகவிற்கு எதிராக உள்ளடியில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சேலம் திமுக நிர்வாகிகள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளதாகவும், அவ்வாறு நடைபெறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்!