24 special

நான் எப்படி இருக்க வேண்டியவன்...!புழலில் கேட்கும் புலம்பல் சத்தம்...!

Senthil balaji
Senthil balaji

கடந்த மாத காலமாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக உலா வரும் செய்தி அமைச்சர்செந்தில் பாலாஜியின் வழக்குதான். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வீடு உட்பட அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தியது . இந்நிலையில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிரான அமலாக்கத் துறையினரின் மேல்முறையீட்டு மனு தீவிரமாக பேசப்பட்டு வந்த நிலையில் மேலும் இந்த வழக்கு வேகம் எடுத்து உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு மூன்றாவது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்ட நிலையில் அவரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக அமைந்தது. 


சில நாட்களுக்கு முன்பாக மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் வெளியிட்ட தீர்ப்பில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவலாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலும் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு  திரும்பும் போது அவரை அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது  செய்வதற்கு அனைத்து அதிகாரமும் உண்டு என்ற தீர்ப்பை வெளியிட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் தரப்பிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் செந்தில் பாலாஜியை காப்பாற்றுவதற்கு திமுக தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மூன்றாவது நீதிபதியின் இந்த தீர்ப்பு அறிவாலய வட்டாரம் மற்றும் செந்தில்பாலாஜியின் மனைவி தரப்பிற்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இனி யாரும் என்னை காப்பாற்ற முடியாதா என செந்தில் பாலாஜி புலம்பும் அளவிற்கு அவரது நிலை தற்போது உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று மாலை அவரை மருத்துவபரிசோதனை செய்த உடன் புழல் சிறைக்கு அதிகாரிகள் மாற்றினார்கள். மேலும் புழல் சிறை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை மருத்துவர்களால்  பரிசோதனை நடத்தப்பட்டது என்றும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பரிசோதனையில் இறுதியாக செந்தில் பாலாஜி மருத்துவமனை சிறையில் கண்காணிக்கப்படுவார் என்று  கூறியிருக்கின்றனர். 

மேலும் செந்தில் பாலாஜி முழுமையாக குணமடைந்த பிறகு அவருக்கு எனன ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு மாற்றப்படுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணியை விசாரித்த போது எத்தனை நாள் தான் செந்தில் பாலாஜியை ஏசி ரூமில் வைத்திருப்பீர்கள் என்ற அண்ணாமலை கேள்வியை எழுப்பிய காரணம்தான் பிரதானமாது என அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர். 

மேலும் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறையில் படுக்கை வசதியுடன் காற்றோட்டமான அறையும் ஒரு காற்றாடியும் இருப்பதாக தகவல்கள் தெரிகிறது. சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது தரப்பினரிடம் புலம்பியதாகவும் மேலும் இந்த வழக்கு தனக்கு சாதகமாக அமைய வேண்டும் என இஷ்ட தெய்வங்களை வேண்டி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளிவந்துள்ளது

இதுமட்டுமல்லாமல் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவே தெரிகிறது. எப்படியும் நீதிமன்றம் மூலம் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் அவரை புழல் சிறையில் இருந்து வெளியில் கொண்டு வரவேண்டும் என போராட இருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன....!புழலில் கேட்கும் புலம்பல் சத்தம்...!