24 special

திமுகவில் செந்தில்பாலாஜி,பொன்முடியை தொடர்ந்து மற்றும் ஒரு அமைச்சர்...!

Senthil balaji,ponmudi
Senthil balaji,ponmudi

திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி என அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஊழல் வழக்குகளில் சிக்கி விசாரணயை எதிர்கொண்டு வரும் நிலையில் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.ஒரு பக்கம் பல்வேறு வழக்குகளை ஆதரமாக கொண்டும் ஆவணங்களை அடிப்படையாக கொண்டும் அமலாக்கதுறை விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது சிபிஐ தனது பிடியை இருக்க தொடங்கி இருக்கிறது ஆ ராசா கனிமொழி உள்ளிட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் அதனை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்த வழக்கு விசாரணயில் நடந்து வருகிறது.


இங்குதான் தற்போது ஆராசா உள்ளிட்டோறுக்கு சிக்கல் எழுந்து இருக்கிறது அதிலும் மீண்டும் 2ஜி வழக்கு உயிர் பெற்று இருக்கும் தகவல்  டெல்லியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.ராசா கனிமொழி உள்ளிட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தீா்ப்புக்கு எதிராக டெல்லி உயா்நீதிமன்றத்தில் 2018, மாா்ச் 19-இல் அமலாக்கத் துறையும், அடுத்த நாள் சிபிஐயும் மேல் முறையீடு செய்தன.

இந்த வழக்கை தினசரி விசாரணை நடத்தி வந்த நீதிபதி பிரஜேஷ் சேதி, சிபிஐயின் வாதத்தை முடித்துவிட்டு அமலாக்கத் துறையின் வாதத்தை தொடங்க இருந்தாா். கடந்த 2020 நவம்பா் 30-ஆம் தேதி அவா் ஓய்வு பெற்றதால் புதிதாக இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.டெல்லி உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா கடந்த மே மாதம்  முதல் இந்த வழக்கை விசாரித்து வருகிறாா். சிபிஐ சாா்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.  நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான சிபிஐ வழக்கறிஞர் நீரஜ் ஜெயின், ‘சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ஆதாரங்கள் அலட்சியமாக முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை மதிப்பீடு செய்த முறையே தவறானது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீா்ப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது. இது சட்டப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

அரசு அதிகாரிகளுக்கும் தொலைத் தொடா்பு நிறுவனங்களுக்கும் இடையேயான தொடா்பு, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான இறுதி தேதி நிா்ணயம், முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை கொள்கை, அனுமதி கட்டணம் மறுஆய்வுக்கு உள்படுத்தப்படாதது, ரூ.200 கோடி முறைகேடு ஆகிய விவகாரங்களில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. இதனால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ வெளிப்படையாக உள்ளது என்றார் 

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை விருவிருப்பாக நடைபெற்ற நிலையில் சிபிஐ வசம் மீண்டும் ஒரு ஆதாரம் சிக்கி இருக்கிறதாம், இந்த வழக்கில் அமலாக்க துறையும் இணைந்து இருப்பதால் ஆ ராசாவின் கணக்கில் வராத இடம் உள்ளிட்டவை சமீபத்தில் முடக்கப்பட்ட நிலையில் விரைவில் சிறப்பு விசாரணைக்கு ஆ ராசாவை புதிய வழக்கில் ஆஜராக அமலாக்கதுறை முதலில் சம்மன் அனுப்ப இருப்பதாகவும் அதன் பிறகு நீதிமன்றம் மூலம் அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் 2ஜி வழக்கில் வாதங்களை எடுத்து வைத்து ஆதாரங்களை நிரூபிக்கவும் சிபிஐ தரப்பு முழுமையாக தயாராகி இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி போன்றோர் அமலாக்கதுறை வலையில் சிக்கியது போல் ஆ. ராசா சிபிஐ மற்றும் அமலாக்க துறை வலையில் விழுவது உறுதியாகி இருக்கிறதாம்.  தமிழக அரசியலை நன்கு கவனித்தால் திமுகவை சேர்ந்த முக்கியமான பெண் தலைவர் சமீபத்தில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்தோ அமைச்சர்கள் கைது செய்யப்படுவது குறித்தோ பெரிய அளவில் எதிர்ப்பு குரலை பதிவு செய்யாத நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.