24 special

இனி பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை இறக்கப்போகும் பெரிய இடி ...!அலறித்துடிக்கும் அறிவாலயம்...!

Ponmudi
Ponmudi

கடந்த ஒரு மாத காலமாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் செய்தி செந்தில் பாலாஜியின் வழக்கு தான்.  செந்தில் பாலாஜி 2015-2016 ஆண்டுகளில் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததற்காக அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியின் மீது நடவடிக்கை எடுத்தனர்.  செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்திய நிலையில் இறுதியாக தலைமை  செயலகத்திலுள்ள செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தினர் . 


தலைமைச் செயலகத்தில் அதிர வைக்கும் ஆவணங்களும் கோப்புகளும் அமலாக்கத் துறையினரால்  கைப்பற்றப்பட்ட நிலையில் சட்டவிரோத பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்  அமலாக்கத் துறையினரின் அதிரடியான சோதனையால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது  

இந்நிலையில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி வீட்டில்   சோதனை நடத்தி இரவு 11 மணிக்கு சோதனையை முடித்தனர். கடந்த 2006-2011 ஆண்டு அமைச்சராக இருந்த பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் கடத்தல் விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அமலாக்கதுறையினரின்  சோதனை பொன்முடி இல்லத்தை தேடிச் சென்றுவிட்டது.. 

மேலும் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி வெளிநாடுகளில் பங்குச் சந்தையில் பல கோடிகளை   முதலீடு செய்துள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அமலாக்க துறையினர் இவர்கள் இருவரையும் சுற்றி வளைத்துள்ளனர். அமலாக்கத் துறையினரின் சோதனையின் பிடியில் அடுத்தபடியாக  யார் சிக்க போகிறார்கள் என்று தெரியாத நிலையில் திமுக கட்சியில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் அடுத்ததாக அமலாக்கத் துறையினர் சோதனை நம்மிடத்தில் வந்து விடுமோ என்ற பயத்தில் இருந்து வருகின்றனர்

இந்த நிலையில் திமுக கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை அமலாக்கத் துறை மூலம் பாஜக டார்கெட் செய்து வருவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறையினரின் அடுத்த ரைடு எந்த அமைச்சர் வீட்டில் இறங்குமோ என பிற கட்சித் தலைவர்கள் முனுமுனுக்கும் நிலையில் உள்ளது திமுக-வின் தற்போதைய நிலை.

செந்தில் பாலாஜியின் வழக்கில் பின்பற்றிய அதே யுக்தியை அமலாக்கத்துறை பொன்முடி வழக்கிலும் கையாள உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் திமுகவின் முக்கிய மற்றும் மூத்த அமைச்சரான பொன்முடியின் தலைமை செயலகத்திலுள்ள அமைச்சர் அறையில் ரெய்டு வருமா என்ற சந்தேகம் இருந்ததால் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியின் அறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் இந்த நிமிடம் வரையில் அமலாக்கத் துறையினர் தலைமை செயலகத்தில் ரெய்டில் இறங்கவில்லை என தெரிகிறது. தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடந்து முடிந்த சோதனை அடுத்த கட்டமாக தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்படும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இரவு பகல் என பாராமல் காத்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆனால் அமைச்சர் பொன்முடியை இன்று மாலை மீண்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு வர சம்மன் அனுப்பிய நிலையில் எந்த நேரமும் அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமை செயலகத்தில் தீவிர சோதனையில் இறங்கலாம் என தெரிகிறது.