24 special

அதிமுக கோட்டை பாஜக வசமானது எப்படி..? வானதி ஸ்ரீனிவாசனின் தரமான சம்பவம்..!

Vanathi Srinivasan, Annamalai
Vanathi Srinivasan, Annamalai

2024 நாடளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிகம் கவனம் பெற்ற தொகுதி கோவை அங்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டதால் பெரும் எதிர்பார்ப்பு இந்திய அளவில் பார்க்கப்பட்டது. அந்த வகையில், கோவை தெற்கு மாவட்ட எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. 

தமிழகத்தில் நான்கு முனை போட்டியாக நிலவி வந்த நிலையில், கோவைத்தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தேர்தல் முடிவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். அங்கு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல் இடத்தை பிடித்து வெற்றியை பதித்தார். மூன்றாவது இடத்திற்கு அதிமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் பெற்றார்.  கோவை பொறுத்தவரை இந்திய அளவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் ஊற்று நோக்கினார்கள். காரணம் அது அதிமுகவின் கோட்டையாக இருந்தநிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கூடுதல் கவனம் பெற்றது. 

அண்ணாமலை தமிழ்நாட்டை தாண்டி தனக்கு என்று உருவாக்கிய பிம்பம் தமிழகத்தில் இரண்டாவது கட்சி பாஜக என்று கூறி வந்தார். தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ந்து விட்டது என்று அண்ணாமலை பெயரை பலரும் பேச தொடங்கினார்கள். அதன் காரணமாகவே தமிழகத்தில் கோவை தொகுதி பெரிதும் கவனம் பெற்றது. கோவை தொகுதியில் பாஜகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர். அதிமுகவின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அதிமுக தான் அங்கு வெற்றி பெரும் என்று கூறியது அதிமுக. ஆனால், பாஜக எம்ஏல்ஏ சத்தமே இல்லாமல் ஒரு சம்பவம் செய்துள்ளார். 

ஏற்கெனவே, கோவை தெற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் அண்ணாமலைக்கு எதிராக உள்ளார். அங்கே பெரிய உள்ளடி செய்து கொண்டு வருகிறார், அண்ணாமலை வெற்றி பெற்று மத்திய அமைச்சராக ஆனால், நிச்சயம் கட்சியை விட்டு நீக்கிவிடுவார்கள். நீங்கள் இருக்கும் கோவை தெற்கு பகுதியில் உங்க ஆளுமை குறைந்துவிடும். அண்ணாமலை வெற்றி பெற்றால் உங்களது லோக்கல் சப்போர்ட் குறைந்து விடும் என அதனால் அண்ணாமலைக்கு எதிராக வானதி ஸ்ரீனிவாசன் குறித்து பல தகவல் வெளியானது.  இந்த தேர்தலில் அண்ணாமலைக்கு எதிராக தான் வானதி ஸ்ரீனிவாசன் வேலைகளை செய்து வருகிறார் என்றெல்லாம் ஒரு செய்திகள் வெளியானது. 

ஆனால், வானதி ஸ்ரீனிவாசன் இதனை எல்லாம் பொய்யாக்கி விட்டார் என்றே சொல்லலாம். அண்ணாமலைக்கு ஆதரவாக களத்தில் பிரசாரம் செய்து வந்த வந்து ஸ்ரீனிவாசன் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாவது இடம் வந்திருந்தாலும் அண்ணாமலைக்கு கோவை தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்ள கோவை தெற்கு சட்டமன்றத்தில் இருந்து தான் அதிகப்படியான வாக்குகள் கிடைத்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. 

பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர் சட்டமன்றத்தை காட்டிலும் கோவை தெற்கு பகுதியில் இருந்து தான் 36.95 சதவீதம் வாக்குகள் வந்துள்ளன. இதன் மூலம் அனைத்து பொய் செய்திகளையும் தகர்த்துள்ளார் வானதி ஸ்ரீனிவாசன். பாஜகவில் ஒரு சாசலப்பும் இல்லை அனைவரும் சமமாக தான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இது என பாஜகவினர் கூறிவருகின்றனர். அதிமுக கோவையில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அங்கு அதிமுக வேட்பாளர் மூன்றுவது இடத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.