24 special

முன்னணி இயக்குனர்களை ஓரம் கட்டி வரும் சூர்யா..? வருத்தத்தில் கங்குவா பட இயக்குனர்..!

Siruthai Shiva, Suriya
Siruthai Shiva, Suriya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி என்பது கிடைக்கவில்லை. அதன் பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்த அவர், பாலாவுடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்திலிருந்து வெளியேறினார் சூர்யா. அடுத்ததாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து பிரியாடிக் பிலிமில் கமிட்டானார் சூர்யா.


கோலிவுட்டில் கதைக்கேற்றவாறு தன்னை ஈடுபடுத்தி கொண்டு நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் சூர்யா. சிவக்குமாரின் மகன் என்ற அடையாளத்தோடு அவர் சினிமாவில் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் கேலிகளையும், கிண்டல்களையும் சந்தித்தார். அதன் பிறகு கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை உருவக்கிவைத்துள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த அவர் இதுவரை 43 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். 

தற்போது, சிறுத்தை சிவாவுடன் கங்குவா படத்தில் நடித்த அவர், படம் இறுதிக்கட்ட பணிகளை முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், சூர்யா இதுவரை கங்குவா படத்திற்கு என்று ஒரு புரமோஷனும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இயக்குனர் சிவா பெரும் உழைப்பை கொட்டி இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார் பல மொழிகளில் உருவான இந்த படத்திற்கு என்று சூர்யா ஒரு பில்டப்புப்பும் கொடுக்காமல் எனக்கென்ன என்று அடுத்த படத்திற்கு மூட்டை கட்டி சென்றுள்ளார் என்கீற வருத்தம் தற்போது சிறுத்தை சிவாவுக்கு ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் கான்குவா படம் கோடை கால விடுமுறையில் வெளியிடப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது குறித்து படக்குழு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் சென்றது. தற்போது தீபாவளிக்கு வெளியாகும் என சினிமாவட்டரத்தில் பேசப்பட்டாலும் அது குறித்தும் சூர்யா பொது நிகழ்ச்சியில் பேசாமலும் அந்த படம் குறித்து எதுவும் கண்டுகொள்ளவில்லை என படக்குழுவினர் சூர்யா மீது அதிருப்தியில் உள்ளார்களாம். முதலில் இருந்த கங்குவா வைப் தற்போது ரசிகர்களிடம் குறைந்து விட்டதாகவும், எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காமல் அப்படியே அமைதியாக விட்டு விட்டு அடுத்த படத்துக்கு சென்று விட்டால் கங்குவா படமும் கல்லா கட்டுவது கஷ்டம் தான் என்றே படக்குழுவினர் பலர் பேச ஆரம்பித்து விட்டதாக சிறுத்தை சிவா சூர்யாவிடம் பேசியுள்ளாராம்.

இப்படி பட்ட சூழ்நிலையில், சினிமா விமர்சர்கள் கூறுவது சூர்யா தொடர்ந்து இயக்குனர்கள் மீது கோவத்தை காட்டி வருகிறார். முதலில் ஹரி, பாலா, வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா வரிசையில் தற்போது சிறுத்தை சிவாவுக்கு இடம் கொடுத்துள்ளார் என கூறுகின்றனர். சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் படத்தை முடித்து விட்டு அடுத்த படத்திற்கு செல்வதால் படம் ரிலீசுக்கு தள்ளாடுவதாக கூறப்படுகிறது. சூர்யா இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன காரணம் கங்குவா பிரியாடிக் படம் என்பதால் எதிர்பார்ப்பு என்பது பெருமளவில் இருந்தது அது தற்போது குறைந்துவருவதாக படக்குழு வருந்தி வருகிறதாம். 

இந்தசூழ்நிலையில், சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 ரெடியாகியுள்ளார். இதனால் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் சூர்யா கெட்டப்பை பார்த்து நெட்டிசன்கள் கலகலப்பு படத்தில் வரும் இளவரசன் போன்று உள்ளதாக கலாய்த்து வருகின்றனர். மேலும், அரசியல் குறித்து கண்டணம் தெரிவிக்க முதல் ஆளாக வரும் சூர்யா தனது படம் குறித்து ஏன் வாய் திறப்பதில்லை படக்குழுவினர் எக்கேடு கெட்டுபோனால் எனக்கென்ன சூழ்நிலையில் தான் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.