24 special

பெண் செய்த காரியம்!! ஆடிப்போன கடலூர்!!

Women
Women

இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களின் எதிர்காலம் மீது எந்த ஒரு அச்சமும் இல்லாமல் பல செயல்களை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் காதல் என்ற பெயரில் தவறான இளைஞர்களிடம் பழகி அது கடைசியில் பல பிரச்சனைகளில் மாட்டிவிடும் விதமாக மாறி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி காதலிக்கும் பொழுது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து விடுகின்றனர்.அவ்வாறு பெண்கள் விட்டு செல்லும் பொழுது காதலித்த ஆண்களோ அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பெண்களை தொல்லை செய்து வருவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தொல்லைகள் செய்யும் பொழுது அந்தப் பெண்  தற்கொலை, புகார் அளிப்பது போன்றவை நடந்து கொண்டுள்ளது.  இந்த நிலையில் இதுபோன்ற சம்பவத்தில் பெண் ஒருவர் வேறொன்றை  செய்துள்ளார்!! அந்தப் பெண் செய்த காரியம் தற்பொழுது விபரீதத்தில் முடிந்துள்ளது!! அது குறித்து விரிவாக காணலாம்..


கடலூரில் உள்ள திருப்பாதிரி புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிவாற்றி வரும் 49 வயதான விக்டர் என்பவர் அதே மாவட்டத்தில் உள்ள ஆண்டி மடத்தில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து அதன் பிறகு வாடகை வீடு ஒன்று எடுத்து அதில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி விக்டர் வீட்டிலிருந்து வெளியே சென்று அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. மேலும் அவரை மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்ட பொழுது அவரின் போன் சுவிட்ச் ஆப் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் கொண்ட விக்டரின் தாய் திருப்பாதிரி  புலியூரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றினை அளித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விக்டரின் மொபைல் கடைசியாக குறிஞ்சிப்பாடி பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆகி இருப்பது தெரியவந்த நிலையில் அங்கு சென்று விசாரிக்கும் பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அது என்னவென்றால்...

அரியலூரில் வசித்து வரும் 21 வயதான ஜனனி என்பவருக்கும், விக்டருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொள்வதாகவும், ஜாலியாக இருந்து வந்ததும், அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு விக்டர் பல உதவிகளை செய்து வந்ததாகவும் தகவல்கள் தெரிய வருகிறது. அதன் பிறகு குறிஞ்சிப்பாடிக்கு வீடு மாறிய ஜனனி ஒரு கட்டத்தில் விக்டரை  விட்டு விலகி வேறு ஒருவரை திருமணம் செய்ய போவதாக கூறியதாகவும், அதற்கு விக்டர் மறுப்பு தெரிவித்து வந்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடன் மட்டும் தான் கடைசி வரை இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் நாம் இருவரும் ஒன்றாக இருந்த விஷயத்தைப் பற்றி வெளியில் கூறி விடுவேன் என்று மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து ஜனனி தனது உறவினரான தட்சணாமூர்த்தியிடம் உதவி கேட்க அவர்கள் இருவரும் இணைந்து பிளான் செய்து  கடந்த 18ஆம் தேதி ஜனனி விக்டரை தொடர்பு கொண்டு தனிமையில் இருப்பதற்கு அளித்ததாகவும், அதை நம்பி விக்டர் குறிஞ்சிப்பாடியில் ஜனணியுடன் தனிமையில் இருக்கும் பொழுது மறைந்திருந்த தட்சணாமூர்த்தி இரும்பு கம்பியை வைத்து விக்டரை அடித்த நிலையில் சம்பவ இடத்திலேயே விக்டர் உயிரிழந்து விட்டதாகவும், இதைத்தொடர்ந்து அவரை சாக்கு மூட்டையாக கட்டி இருவரும் நெய்வேலி வேலுடையான் பேட்டை பகுதியில் இருக்கும் புதரில் வீசியதாகவும், விசாரணையின் பொழுது வீசப்பட்ட இடத்தை தட்சணாமூர்த்தி அடையாளம் காட்ட அந்த இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு கிடந்த எலும்பு கூடை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்!! இது குறித்து விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு காணாமல் போன வழக்கு தற்பொழுது கொலை வழக்காக மாற்றி ஜனனி மற்றும் தட்சிணாமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்த செய்தி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!!!