24 special

அள்ள அள்ள வந்த அயல்நாட்டு கரன்சிகள் ...! பொன்முடி வீட்டில் சிக்கிய மேட்டர் ரொம்ப பெருசு...!

Ponmudi
Ponmudi

தற்போது தான் அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியின் விவகாரத்தில் முழுமையாக இறங்கி வேலை செய்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது அதனால் அடுத்த ரெய்டு அல்லது அடுத்த வேறு ஏதேனும் நடவடிக்கைகளில் அமலாக்கத்துடைய ஈடுபடுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம் அதுவரை நாம் எதை நினைத்தும் கவலைப்பட தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த திமுக வட்டாரங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நேற்று அதிகாலை 7 மணி அளவில் காவல்துறைக்கு கூட முன்னறிவிப்பு தெரிவிக்கப்படாமல் ராணுவ படை வீரர்களுடன் அமலாக்கத்துறை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனையில் இறங்கியது. சென்னை சைதாப்பேட்டை தி நகர் மற்றும் விழுப்புரம் சண்முகபுர காலனி போன்ற இரு இடங்களில் அமைந்துள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 


இச்சோதனையின் பொழுது அதிகாலையில் விழுப்புரம் மாவட்டம் சண்முகபுர காலனியில் உள்ள அமைச்சரின் வீட்டிற்கு சென்ற பொழுது வீடு பூட்டிய நிலையிலும் தோட்டக்காரராக ஒரே ஒருவர் மட்டும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது என்று கூறப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியிலும், கப்பியாம்பூலியுரில் சிகா பள்ளிகளும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு பல ஆவணங்களை அலசி ஆராய்ந்துள்ளனர். 

மேலும் இந்த சோதனை அமைச்சர் பொன்முடி 2006 - 2011 இல் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்த நில மோசடி க்காக தற்போது அமலாக்க துறையால் மேற்கொள்ளப்படுகிறது என்று அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது,  அமைச்சரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொள்வதற்காக பீரோ சாவியை கேட்டுள்ளனர் பீரோ சாவி கிடையாது சாவி தொலைந்து விட்டது என்று கூறப்பட்டதாகவும், பீரோவை திறக்கப் டூப்ளிகேட் சாவி தயாரிக்கும் தொழிலாளியை பாண்டிச்சேரியில் இருந்து வரவழைத்து போலி சாவி செய்து அமைச்சர் பொன்மொழியின் பீரோவை திறந்து சில ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் அதனை சரிபார்க்கவும் வங்கி அதிகாரியும் ரெய்டு நடைபெற்ற இடங்களுக்கு சென்றதாகவும், பொன்முடி வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பிட நகை மதிப்பீட்டாளரும் வந்துள்ளனர். மேலும் அமைச்சர் பொன்மொழியின் வீட்டில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பில் ரொக்க பணத்தை பறிமுதல் செய்ததாகவும் அள்ள அள்ள குறையாத ஜப்பான், அமெரிக்கா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை அமலாக்கத்துறை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இப்படி அமலாக்கத்துறை சோதனை செய்ய ஆரம்பித்து நேரங்கள் செல்ல செல்ல ஒவ்வொரு விதமான ஆவணங்களும் தோண்ட தோண்ட ரொக்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியது அமைச்சர் பொன்முடி தரப்பிற்கு பாதகமாக முடியும் என தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 13 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இன்று அதிகாலை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்கள் . 

அடுத்தபடியாக இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்துள்ளனர். இந்த ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்து சென்றதை விட அதிகமான ஆவணங்கள் மற்றும் அயல்நாட்டு முதலீடு போன்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.