24 special

புடவை கட்டும் பெண்களுக்கு புதிதாக பரவும் புற்றுநோய்!!!

SAREE CANCER ISSUE
SAREE CANCER ISSUE

இந்த உலகத்தில் உள்ள மக்கள் எல்லாருமே ஆரோக்கியமாகத்தான் உள்ளனர் என்று உறுதியாக கூற முடிகிறதா?? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அவர்களின் உடல்நிலை ஏதோ ஒரு குறை ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதேபோல உலகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு வகையான நோய்கள் உருவாகிக்கொண்டே தான் உள்ளது. சிலருக்கு அவர்களுக்கு புதிய நோய் ஏதும் வந்துள்ளதா என்று கூட தெரியாமல் அவர்களின் அன்றாட வாழ்வில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர். இதற்கு முன் அனைவருக்கும் தெரிந்த நோய் என்றால்  அவற்றின் அறிகுறிகள் தெரிந்து அதன் பின் அவர்கள் அதற்கான மருத்துவரை அணுகி அதற்கு ஏற்றார் போல்  மருந்துகளை எடுத்துக்கொண்டு சரி செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு  அவர்களுக்கு என்ன நோய் உள்ளது என்று முதலில் அவர்களுக்கு தெரிய வேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் இருப்பார்கள்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு இது போலவே தான் கொரோனா நோயே உருவானது. இது அதிக அளவில் மற்றவர்களுக்கு பரவி வந்த நிலையில் அதிக அளவில் மக்கள் தாக்கப்பட்டு அதிகமாக உயிர் இழப்புகளும் ஏற்பட்டது. மேலும் இவ்வகை நோய் ஏற்பட்டு இருக்கும் காரணத்தினால் உலகெங்கும் தொழில்கள் போன்றவை முடக்கப்பட்டு வீட்டிலேயே அனைவரும் இருந்தனர். இது போன்று தொடர்ந்து இன்னும் பல நோய்கள் உலகில் எங்கெங்கில் பரவிக் கொண்டுதான் உள்ளது. எங்கிருந்துதான் புது புது நோய்கள் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் பொதுமக்களும், மருத்துவர்களும் மேலும் பல ஆராய்ச்சியாளர்களும்  குழம்பி போய் நிற்கின்றனர்.இவ்வாறு புது புது நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் ஒருவேளை உணவு முறையில் ஏதேனும் தவறு உள்ளதா என்று அவர்கள் உண்ணும் உணவினை  திருத்திக் கொள்ளவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் சரியாக இவ்வகை நோய்கள் எப்படி பரவுகிறது எப்படி வருகிறது என்று சரியாக தெரியவில்லை. தொடர்ந்து பல ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு தான் இந்த நோய்கள் எப்படி வருகிறது என்று கண்டுபிடிக்க முடிகிறது. 

அதுபோலவே தான் தற்போது புடவை கட்டும் பெண்களுக்கு ஒரு நோய் பரவி வருகிறதாம். கேட்கவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது அல்லவா!!!இந்தியாவில் உள்ள பெண்கள்  அதிக அளவில் எதற்கு ஆசைப்படுகிறார்களோ இல்லையோ புடவைக்கு என்றுமே அதிக ஆசை கொள்வார்கள். நகைகள் மீது கூட அதிகம் ஆசை வைத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனால் புடவை என்றால் பெரும்பாலான பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவே இருக்கும். இவ்வாறு இந்தியாவில் புடவை கட்டும் பெண்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இவ்வாறு பெண்கள் விரும்பி கட்டுகின்ற புடவையினால் அவர்களுக்கு  புற்றுநோய் வருகிறது என்று செய்தி வெளியாகிறது. மற்ற நாடுகளில் உள்ள பெண்கள் அதிக அளவில் புடவைகள் கட்டாததால் இந்த வகை நோய் மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதாவது, டெல்லியில் உள்ள பி எஸ் ஆர் ஐ மருத்துவமனையின்  புற்றுநோய் நிபுணரான விவேக் கூற்றுப்படி, ஒரு பெண் ஒரே புடவையை நீண்ட நாட்களுக்கு அணிவதால் அவர்களின் இடுப்பில் உள்ள தோலினை பாதித்து அவர்களின் தோல் உரிய ஆரம்பித்து கருப்பாக ஆரம்பிக்கும். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு புற்றுநோய் வர ஆரம்பிக்கும் என்று கூறியுள்ளனர். வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் இந்த நோய் வருவதற்கு அதிகமாக  வாய்ப்புகள்  உள்ளது என்று செய்தி வெளியாகிறது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில்  இவ்வகையான நோய்கள் பதிவாகி கொண்டு வருகிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் இது ஒரு சதவீதமாக தற்போது பரவி வருகிறது. எனவே புடவை கட்டும் அவர்களின் புடவையையும் அவர்களின் உடலையும் மிகவும் சுத்தமாக பராமரித்தால் இவ்வகை நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகிறது.