தற்போது தான் மெல்ல மெல்ல அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரும் சமயத்தில், தற்போது அதிர்ச்சி தரும் விஷயமாக பி ஏ 2 என்ற ஓமிக்ரான் வகைகளும் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக 2.6 கோடி மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில் அதிக தொற்று பரவி இருப்பதால், கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படியான ஒரு சமயத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அதில் பேசக்கூடிய சுகாதார பணியாளர்கள், இரவு முதல் தம்பதிகள் தனித்தனியாக தூங்கவேண்டும்; முத்தமிட்டுக் கொள்வது கூடாது; கட்டிப் பிடிக்கக் கூடாது; தனி தனியாக சாப்பிட வேண்டும்; உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி! என கூறுகின்றனர். தற்போது. வைரஸ் பரவுதலை தடுக்க 2 ஆயிரம் ராணுவ மருத்துவ ஊழியர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களை சீன அரசு ஷாங்காய் நகருக்கு அனுப்பி இருக்கின்றது.
மேலும் ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 19 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷாங்காய் நகரில் வசிக்கக்கூடிய இரண்டரை கோடி மக்களுக்கு அடுத்த மூன்று நாட்களில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். ஷாங்காய் நகரில் உள்ள அரங்குகள், மைதானங்கள், ஓட்டல்களை தனிமைப்படுத்துதல் மையமாக அரசு மாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை பொறுத்தவரை, தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.மீண்டும் இது போன்று வைரஸ் பரவ தொடங்கினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கூடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்து உள்ளது .