Technology

ட்விட்டருக்கு ஆப்பு வைத்த koo..! நீ என்ன ப்ளூ டிக் தருவது..என் மக்களுக்கு நான் தருகிறேன் கிரீன் டிக்..! அதிரடி அறிவிப்பு..!

koo and twitter app
koo and twitter app

விஞ்ஞானம் வளர்ந்து தற்போது நாம் டிஜிட்டல் உலகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அதில் குறிப்பாக இந்தியாவை எடுத்துக் கொள்ளும் போது, டிஜிட்டல் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாம் ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக பிசினஸ் செய்வது முதல் பொழுதுபோக்குக்காக சமூக வலைத்தளங்களில் இருப்பவர்கள் வரை அனைவரும் ஒரே இடத்தில் இருக்கும் பல்வேறு தளங்கள் இருந்தாலும், குறிப்பாக முகநூல்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஷேர் சாட், கூ உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் செயலிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது. 


ட்விட்டரில் சிறப்பு அம்சமாக பிரபலங்களின் கணக்குகள், மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் என குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ப்ளூ டிக் குறியீடு இடம்பெற்று இருக்கும். அதன் மூலம் அந்த கணக்கு ட்விட்டர் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டது என்ற ஒரு அறிதல் நமக்கு ஏற்படும். அவ்வளவுதான். ஆனால் அவர்கள் பதிவிடுவது அனைத்தும் உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் அவ்வாறு ஒரு குறியீடு இருந்தால் தனி மதிப்பை கொடுப்பதாக மற்ற ப்ளூ டிக் பெறாதவர்கள் நினைப்பது வாஸ்தவம்.


இதையெல்லாம் உற்றுநோக்கி வந்த இந்திய நிறுவனமான கூ. கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மெல்ல மெல்ல வளர்ச்சி பெற்றது. தற்போது பரவலாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்து இருக்கின்றது. இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால், ட்விட்டர் போன்ற அதாவது ட்விட்டருக்கு மாற்றாக koo செயல்பாடு இருக்க, தொடர்ந்து பல அம்சங்களை ஒவ்வொன்றாக சேர்த்து வருகிறது. 

இப்படி ஒரு நிலையில் அனைத்து பயனர்களுக்கும், ஒவ்வொருவரும் தங்கள் கணக்கை தாங்களே அதிகாரபூர்வமாக மாற்றிக் கொள்ளும் வகையில் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்தது. இது குறித்த அறிவிப்பை கூ நிறுவனம் சில நாட்கள் முன் அறிவித்தது.

எனவே தன்னுடைய கணக்கை அதிகாரபூர்வமாக மாற்ற விரும்பும் பயனாளர்கள் அவர்களுடைய ஆதார் எண் இணைப்பு, மொபைல் எண் இணைப்பு மூலம் அதிகாரபூர்வமான என்பதற்கான அடையாளமாக பச்சை நிற டிக் பெற முடியும். அதே வேளையில் கூ வில் புழங்குவது பாதுகாப்பானதாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கூ செயலியை பொறுத்த வரை, இந்திய நிறுவனம் என்பதாலும், நாட்டு மக்கள் தைரியமாக பயன்படுத்த முடியும். அதுமட்டுமல்லாமல், போலியான கணக்குகள் எதுவும் இல்லாமல்  செய்துவிட முடியும். இதன் மூலம்  தேசத்திற்கு எதிராக டூல்கிட் மூலம் பல எதிர் கருத்துக்களை தவிர்த்து தேச ஒற்றுமையும் பாதுகாக்க முடியும், தனிப்பட்ட கணக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.