விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆந்திரா மாநிலத்திற்கு சென்ற நிலையில் புத்தர் சிலைக்கு வழிபாடு நடத்தினார் அப்போது அங்கிருந்த தொண்டர்கள் நமோ புத்தாயா என்று திருமந்திரம் பாடியதும், இறுதியில் ஒருவர் மெல்லிய குரலில் நமோ நாராயண புத்தாயா என கூறியதும் திருமாவளவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
சனாதான ஒழிப்பு என்ற கொள்கையை கொண்ட நபராக தன்னை அடையாள படுத்தி கொண்டவர் திருமாவளவன், இந்து கோவில்கள் குறித்தும் இந்து கடவுள் ஐயப்பன் குறித்தும் தவறாக பேச பெரும் சர்ச்சையில் சிக்கியவர் திருமாவளவன், இப்படி பல்வேறு விவகாரங்களில் சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன் இறுதியாக ஆந்திர மாநிலத்தில் சனாதானாம் என்றால் என்ன என்பதை கண்டறிந்துள்ளார்.
ஆந்திர. மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருமாவளவன் சென்று இருந்தார், அங்கு இருந்த புத்தர் சிலைக்கு மலர் தூவி வழிபாடு நடத்தினார், அப்போது அருகில் இருந்தவர்கள், நமோ புத்தாயா என உரத்த குரலில் முழக்க மிட்டனர், இறுதியில் ஒருவர் நமோ நாராயண புத்தாயா என கூற திருமாவளவன் நமட்டு சிரிப்புடன் நகர்ந்து சென்றார்.
என்னதான் சனாதானத்தை ஒழிப்போம் என கோஷம் போட்டாலும் திருமாவளவனை சுற்றியே சனாதான கோஷம்தான் கேட்பதாக நெட்டிசன்கள் பதில் கொடுத்து வருகின்றனர், தமிழ்நாடு இல்லை தமிழ் புத்தாண்டு தினத்தில் பிரியாணி அண்டாவில் மாட்டு பொங்கல் வைக்க, இது "ஆந்திரா பெருமாள்" பூமி அதுதான் நமோ நாராயணா கோஷம் கேட்கிறது என பல்வேறு தரப்பினரும் அவரது பதிவிற்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்.வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது..!