24 special

கற்பழித்த சிறார்கள்..! காவல்துறையை கண்டித்த ஆணையம்..!

Hyderabad
Hyderabad

ஹைதராபாத் : கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய நான்குபேரை காவல்துறை பத்திரமாக நரகத்திற்கு வழியனுப்பிவைத்திருந்தது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் காவல்துறையினர் மீது கொலைக்குற்றம் சுமத்தலாம் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


27 நவம்பர் 2019 அன்று பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் ஹைதராபாத் நெடுஞ்சாலை NH - 44 சாலையில் நிற்கும்போது நான்கு மிருகங்களால் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த அரக்கர்கள் பெண் மருத்துவரை தீயிட்டு கொளுத்தினர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட கயவர்களை போலீசார் தீவிரமாக தேடினர்.

சம்பவம் நடந்த சிலநாட்களிலேயே அந்த கயவர்கள் பிடிபட்டனர். முகம்மது ஆரிப், சிந்தகுண்டா சென்னகேசவலு, ஜோலு சிவா மற்றும் ஜோலு நவீன் ஆகிய நான்கு குற்றவாளிகள் பெண்மருத்துவர் சடலமாக கிடைத்த அதே NH 44 சாலை அருகே காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷனில் முன்னாள் சிபிஐ இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தனது சீலிட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சூர்யகாந்த் கொண்ட அமர்வு சீலிட்ட அறிக்கையை பகிர்ந்துகொள்ள உத்தரவிட்டது.

அந்த அறிக்கையில் "குற்றவாளிகள் என கருதப்பட்ட ஜோலு நவீன், சிந்தகுண்டா சென்னகேசவலு, ஜோலு நவீன் ஆகியோர் சம்பவம் நடந்த காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரணமடைந்தே ஆகவேண்டும் அல்லது மரணத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற உள்நோக்கத்துடனேயே காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த வழக்கில் தொடர்புடைய 10 அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதியவேண்டும்" என அந்த ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தெலுங்கானா உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது.