24 special

முட்டாள் வாயை கொடுத்து வம்பில் சிக்கிய ராகுல் நாடு விட்டு நாடு போயும் மாறவில்லை!


உளறிக்கொட்டுவதில் வல்லவரான இந்திய இளவரசர் ராகுல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக லண்டன் சென்றுள்ளார். மே 23 அன்று லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்தியா 75 என்ற தலைப்பில் உரையாடவிருக்கிறார். இதில் 75 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள் மற்றும் ஏற்பட்டுள்ள நாகரிக மாற்றங்கள் குறித்தும் உரையாடவிருக்கிறார்.


இந்தியாவிற்கு காத்திருக்கும் சவால்கள் பற்றி பேசவிருக்கும் ராகுலுடன் லண்டன் வாழ் இந்தியர்கள் கலந்துரையாடவிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் லண்டனுக்கு ராகுலுடன் காங்கிரஸ் தலைவர்களான சல்மான் குர்ஷித் மற்றும் ப்ரியன்க் காக்டெ ஆகியோர் பயணப்பட்டனர். மேலும் இவர்களும் அங்குள்ள இந்திய மக்களிடம் பேசவுள்ளனர்.

கடந்த இரு நாட்களில் சில முக்கிய தலைவர்கள் காங்கிரசிலிருந்து விலகியுள்ளதை கண்டுகொள்ளாமல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸாரே விமர்சித்து வருகின்றனர். மேலும் குஜராத் காங்கிரஸ் தலைவரான ஹர்திக் ராகுலின் வெளிநாட்டுப்பயணத்தை விமர்சித்தே விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லண்டன் சென்றுள்ள ராகுல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் "ஐரோப்பிய அதிகாரிகள் சொல்வதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்பதில்லை. திமிராக நடந்துகொள்கிறார்கள்" என கூறியுள்ளார். ராகுலின் பேட்டியை பகிர்ந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ராகுலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

"ஆம். வெளியுறவுத்துறை மாறிவிட்டது. ஆம். அவர்கள் அரசின் ஆணையை பின்பற்றுகிறார்கள். ஆம். அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். இதற்க்கு பெயர் திமிர் அல்ல. இதன் பெயர் நம்பிக்கை. இது தேசபக்தி. தேசத்தின் மீது இருக்கும் மரியாதை" என தனது ட்விட்டரில் ராகுலுக்கு சம்மட்டியடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராகுலின் இந்த பேச்சை கண்டித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர், இந்தியர் ஏன் ஐரோப்பிய யூனியன் பேச்சை கேட்க வேண்டும் ராகுல் என்ன முட்டாளா, எனவும் பலரும் சமூக வலைத்தளங்களில் பலவாறு வைத்து செய்து வருகின்றனர், நாடு விட்டு நாடு சென்றும் ராகுலின் உளறல் மாறவில்லையே!