![mk stalin, ilayaraja](https://www.tnnews24air.com/storage/gallery/fn1vOYok7njLg0DfcG7eh7REazdzEQRRLeTaIy0c.jpg)
பல கலாச்சாரங்கள் மதங்கள் மொழிகள் நிறைந்த நாடக இந்தியா திகழ்ந்து வருகிறது. அத்தகைய நாட்டின் கலாச்சாரத்தையும் தேசப்பற்றையும் மங்காமல் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்தி வருகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தையும் உலக நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னுக்கு வர வைத்துள்ளது இதற்கு மிக முக்கிய காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையும் அவர் கொண்டு வர திட்டங்களும் தன் வீடாக இந்தியா மக்களை நினைப்பதுமே! ஆனால் இதே போன்ற சூழ்நிலைகளும் கருத்துக்களை கொண்டவர்களும் நாட்டின் பிற மாநிலங்களில் இருக்கிறார்களா என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தமிழக முதல்வராக இருக்கும் மு க ஸ்டாலினே இந்துக்கள் குறித்த பண்டிகைகளிலும் விழா நாட்களிலும் மக்களுக்கு எந்த ஒரு வாழ்த்துக்களையும் தெரிவித்தது அல்ல என இந்து சமய ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் மற்ற மதத்தினவரின் விழா நாட்களிலும் சரி பண்டிகை நாட்களிலும் சரி முதல் பதிவாக தமிழக முதல்வரின் பதிவும் திமுகவினரின் பதிவு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல கடுமையான விமர்சனங்கள் எதிர்க்கட்சி தரப்பில் முன்வைக்கப்பட்டது இருப்பினும் திமுக அறிவாலய தலைமை அதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இந்த வரிசையில் தமிழக முதல்வரின் மகனும் தமிழக அமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறி அந்த கருத்தில் பின் வாங்காமல் இருப்பது நாட்டின் பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகளை பெற்றது. இதனால் திமுகவின் முக்கிய கூட்டணியான INDI கூட்டணியிலும் திமுகவிற்கு எதிர்ப்பு அலைகள் வீசியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் தாண்டி தமிழகத்தின் பல இடங்களில் இந்து சமயத்திற்கு எதிரான கருத்துகளும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருப்பது செய்திகளில் வெளியான வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி இந்து சமய அறநிலையத்துறை இந்துக் கோவில்களை காப்பதற்காக வைக்கப்படவில்லை இந்து கோவில்கள் காக்கப்பட வேண்டும் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இந்து சமய அறநிலைத்துறை இருக்கவே கூடாது என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் விமர்சனம் செய்தார். அது மட்டும் இன்றி இந்து சமயத்தில் நிலங்களை ஆக்கிரமிப்பதோடு இந்த சமய அறநிலையத்துறை இந்து கோவில்களை பனங்காய்க்கும் மரமாகவும் பார்ப்பதாக கடுமையாக சாடியிருந்தார். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய மற்றும் பழம்பெரும் முக்கிய நடிகர்கள் வலதுசாரி கருத்துக்களை கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.
முன்னதாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான விஜயின் தந்தை சந்திரசேகர் முழுவதுமாக தற்போது இந்து சமயத்திற்கு மாறிவிட்டார் சிவனே எனது முதல் கடவுள் ஒவ்வொரு வாரமும் சிவனை தேடி நான் சென்று விடுவேன் மனதில் குழப்பம் ஏற்படும் போதெல்லாம் ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து சிவனை நோக்கி தியானத்தால் அவ்வளவு அமைதி கிடைக்கிறது என்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார். தற்பொழுது இசை என்றாலே இளையராஜா தமிழ் மண்ணையும் இசையையும் பிரிக்க முடியாத வகையில் இசையமைப்பவர் இளையராஜா என்ற பல ரசிகர் கூட்டங்களை கொண்டுள்ள இளையராஜா நான் சிவனின் பக்தன் என்று மார்தட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா தன்னை ஒரு சிவன் பக்தன் என்றும் ஒவ்வொரு பௌர்ணமி தோறும் சிவன் கோவிலுக்கு சென்று விடுவேன் திருவாசகத்தை ரெக்கார்ட் செய்தது போன்று தற்பொழுது திவ்ய பிரபந்தத்தையும் ஒளிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன் விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வரலாகி வருகிறது ஆனால் அதே சமயத்தில் மேடையில் இளையயராஜா நான் ஒரு சிவ பக்தன் என பெருமையாக கூறியது இடதுடரிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.