![prasanth, vijay](https://www.tnnews24air.com/storage/gallery/KqFZKWLb8maqu7x86X3KZX95qQH2IMbaQqwsbOdK.jpg)
கடந்த மாத டிசம்பரில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இதில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரும்பாலான பாதிப்புகளை சந்தித்தது. ஆனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலே தூத்துக்குடி மாவட்டம் மழையால் பெரும் பாதிப்பை சந்தித்ததாகவும் கிட்டத்தட்ட 1000 வருடத்திற்கு பிறகு இது போன்ற மழை தூத்துக்குடியில் பெய்துள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் கனமழையால் குளங்கள் அனைத்தும் நிரம்பி அதில் உடைப்பு ஏற்பட்டும் மாநகர பகுதிகள் முழுவதும் வெல்லம் சூழ்ந்து பெரும்பகுதிகள் தீவாக வகைகள் காட்சியளித்ததும் மக்கள் தங்களது உடைமைகள் அத்தியாவசிய பொருள்கள் சான்றிதழ்கள் என அனைத்தையும் இழந்து நிற்கதியாக நின்றனர்.
இருப்பினும் அரசு தரப்பில் கொண்ட நம்பிக்கையால் நிவாரண பணிகளும் மீட்பு நடவடிக்கைகளும் நடக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பொழுது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு அரசு அதிகாரி கூட பார்க்க முடியவில்லை என்று மக்கள் கொந்தளித்தனர். மழை நின்று கிட்டத்தட்ட 20 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை மழை நீர் வடியவில்லை என்பதும் மழைநீர் வடிவதற்கான எந்த ஒரு நடவடிக்கையிலும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளாக உள்ளது. இதற்கு முன்னதாகவே மத்திய அரசு மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது அதாவது மழை பாதிப்புகள் முழுவதும் சீராவதற்கு முன்பாகவே மத்திய அரசு தனது அதிகாரிகளை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொள்ள வைத்தது. அதுமட்டுமின்றி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பொறுப்பில் தமிழக பாஜக சார்பாக தூத்துக்குடிக்கு பல நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டது. மழை நின்று அடுத்த நாளே தூத்துக்குடிக்கு விரைந்த அண்ணாமலை தூத்துக்குடி மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மழை பாதிப்பை ஆய்வு செய்தார்.
இவரைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு சென்றார், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் தூத்துக்குடி சென்று மக்களின் துயரத்தை கண்டு அரசை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இதனை அடுத்து தமிழ் திரையுலகம் தரப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை இரு பெரும் கண்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார், நடிகர் விஜய்யும் தூத்துக்குடிக்கு நேரடியாக சென்று மக்களுக்கு தன் கையால் நிவாரண பொருட்களை வழங்கினார். இப்படி வரிசையாக தூத்துக்குடிக்கு சில அரசியல் பிரபலங்களும் திரை உலக பிரபலங்களும் விரைந்து வரும் நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருந்த பிரசாந்த் சமீபத்தில் தூத்துக்குடிக்கு சென்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சார்! விஜய் படத்துல கமிட் ஆகி இருக்கீங்களா என்று பத்திரிகையாளர்கள் ஒருவர் உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியதற்கு இணைந்து நடிக்கிறோம் என்று பணிவாக பதில் கூறினார். பிரசாந்த் இப்படி கூறிய பதில் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக உலா வருகிறது ஏனென்றால் விஜய்க்கு முன்னதாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த் அதனை குறிப்பிடும் வகையில் இணைந்து நடிக்கிறோம் விஜய் படத்தில் நானாக போய் கமிட் ஆகவில்லை என்ற அர்த்தத்தை விளக்கும் வகையில் பிரசாந்த் கூறியதாக பலர் இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.