![Vijay, Prasanth](https://www.tnnews24air.com/storage/gallery/2wbCIiBeDfa8w7owlFyYhUUR2SvnL4K74jcAl2DR.jpg)
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த பிரசாந்த் 80ஸ்களின் கனவு நாயகனாக இருந்தார். ஆனால் தற்போது சினிமாவில் அவரது வாய்ப்பு நழுவி ஆள் எங்கே இருக்கிறார் என்ற கவலையில் மக்கள் இருந்தனர். அப்போது பலரின் கனவு நாயகனாக இருந்த பிரசாந்த் தற்போது மவுஸ் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் எப்போது காட்டுக்கு ராஜா என்பதை நிரூபிக்கும் விதமாக பேசியது மக்கள் இடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் கமல் , ரஜினிக்கு பிறகு கலக்கி வருபவர் அஜித் மட்டும் விஜய் தற்போது கோலிவுட் சினிமாவில் கால் பதித்து இருக்கின்றனர் எங்களை தாண்டி தான் அடுத்து மற்றவர்கள் என்ற நோக்கத்தில் அஜித், விஜய் மக்கள் இடத்தில் இடம் பிடித்து மார் தட்டி வளம் வருகின்றனர். இவர்கள் வளர்ந்து வரும் காலத்தில் தன் கட்டுப்பாடில் வைத்திருந்தவர் பிரசாந்த் வைகாசி பொறாந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இவர் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களை நடித்துள்ளார்.
கல்லூரி வாசல் என்ற படத்தில் பிரசாந்த் தான் ஹீரோஅஜித் கூட சைட் ரோலில் தான் நடித்தார். மணிரத்னத்துடன் திருடா திருடா, ஷங்கருடன் ஜீன்ஸ் என இவர் நடித்த படங்கள் எல்லாமே செம ஹிட்டானது. அதன் பிறகு திருமண வாழ்க்கையில் நுழைந்த பிரசாந்த் சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார். அது தான் அவருக்கு தலைகீழாக மாற்றியதும் கூட கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்தார் பிரசாந்த். ஆனால் அவர் வேறு ஒருவரை படிக்கும் போது திருமணம் செய்து இருந்தார். அந்த தகவல் இவருக்கு தெரிய மனைவியை விவகாரத்து செய்து விட்டார். அவர் நடித்த அந்தகன் படம் கூட ரொம்ப நாட்களாக கிடப்பில் கிடந்தது.
வெகு நாட்களாக வெளியில் தலை காட்டாமல் இருந்த பிரசாந்த் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடந்த வாரம் தூத்துக்குடி ஏ ஆர் எஸ் மஹாலில் வைத்து ஆயிரம் பேருக்கு அரிசி உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பெண்கள் செல்ஃபி எடுக்க வேண்டும் என கேட்டவுடன் பெண்களிடம் இருந்து நடிகர் பிரசாந்த் செல்போனை வாங்கி சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். அதற்கு முந்தின நாள் தான் விஜயும் நெல்லை மாவட்டத்தில் மக்களு நலத்திட்ட உதவிகள் செய்தார்.
இந்நிலையில் தான் விஜயின் கோட் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். விஜயுக்கு போட்டியாக இருந்தவருக்கா இந்த நிலைமை மொக்க ரோலை கொடுப்பாங்களோ எனப் பலரும் கிசுகிசுத்து வந்தனர். அப்படத்தின் ஷூட்டிங் கூட தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுகுறித்து அவரிடம் கேள்வி ஒன்றை செய்தியாளர்கள் முன் வைத்தனர். அப்போது, விஜய் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கீங்களே எப்படி பீல் செய்றீங்க எனக் கேள்வி கேட்டனர். அதற்கு அசராத பிரசாந்த், இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறோம் என தக் லைப் பதிலை கொடுத்தார். பதிலிலே இத்தனை தெளிவு இருக்கவரு கோட் படத்தில் என்ன கதாபாத்திரத்துக்கு ஓகே சொல்லி இருக்கார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.