லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜர் நடிப்பில் "லியோ" திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. நாட்டில் உள்ள ரசிகர்கள் அனைவரும் படத்தினை காண ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கின்றனர். தற்போது தமிழகத்தில் நாளை காலை 9மணிக்கு முதல் காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.விஜய் அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகள் அறிவித்தவுடன். தற்போது விஜயின் படத்திற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஆடியோ வெளியிட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற பொழுது திமுக அரசு அதனை நிறுத்த சொல்லி காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்ததால் இசை வெளியிட்டு விழாவிற்கு தடை செய்யப்பட்டது.
அதற்கு எதிராக ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி விஜய் அரசியலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக கண்டனத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அதற்கான காரணம் லியோ படத்தை தமிழ்நாட்டில் விநியோகிக்க ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டதற்கு லியோ படக்குழு மறுத்துள்ளதாம் அதனால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரவில்லை. தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் திமுக அரசுக்கு ரசிகர்கள் சமூக தளத்தில் கண்டனத்தை தெரிவித்தனர்.இதற்கிடையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் திமுக அரசுக்கு எதிராக போஸ்டர் ஓட்டினர் அதில் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவி ஏற்பதுபோலும் அவருக்கு பிரதமர் மோடி பதவி பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு வரவிருப்பதாகவும் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் திமுகவிற்கு எதிர்ப்பை தெரிவித்தனர்.
தற்போது வரை லியோ படத்திற்கான ரசிகர்கள் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து விஜய் ரசிகர்கள் ஆதரவு அளித்து வரும் நிலையில் இன்று கோயம்பத்தூரில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "லியோ வேட்டைக்கும் ரெடி! கோட்டைக்கும் ரெடி! என குறிப்பிட்டு 234 என தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளனர். அதே போன்று 86வது வார்டு புல்லுக்காடு பகுதி விஜய் ரசிகர்கள் சார்பில் "தமிழும் தளபதியும் எங்கள் அடையாளம்... ஓராயிரம் ஓநாய்களின் ஓலம் ஒரு சிங்கத்தின் கர்ஜனைக்கு ஈடாகாது..." என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த போஸ்டர்கள் அனைத்தையும் பார்க்கும்போது திமுக அரசுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் எவ்வளவு நெருக்கடி விஜய் மீது கொடுத்தாலும் ரசிகர்கள் நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்ற கருத்தை தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்கள் நாளை வெளியாகும் லியோ படத்திற்கான வேலைகளை செய்து வருகின்றனர். படத்தினை கான சமூகத்தளத்தில் தங்களது எதிர்பார்ப்பை பகிர்ந்து வருகின்றனர்.