24 special

முடியவே முடியாது....! கை விரித்த பிரசாந்த் கிஷோர்....!

prashant kishor, india kootani
prashant kishor, india kootani

பிரசாந்த் கிஷோர் என்பவரை குறித்து அரசியல் வட்டாரங்களில் நன்கு தெரியும் ஏனென்றால் இவர் தேர்தலில் சில சிறந்த வியூகங்களை ஒரு கட்சிக்கு வகுத்து கொடுத்து அக்கட்சியை ஒரு தேர்தலில் வெற்றியடையச் செய்வதை தனது பணியாக மேற்கொண்டு வருபவர். அப்படி பிரசாந்த் கிஷோர் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக விற்கு ஆதரவாக வியூகங்களை வகுத்துக் கொடுத்து 2021 ஆண்டு தேர்தலில் திமுகவை வெற்றியடைய செய்தார். இதனை அடுத்து ஆட்சி கட்டிலில் அமைந்து திமுக கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் சம்பாதித்தது, எங்கு பார்த்தாலும் ஊழல், கலவரம், மக்கள் போராட்டம், முற்றுகை என தமிழக முழுவதும் அரசை நோக்கி வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தரப்பில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் நடை பயணம் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.


இதனால் பாஜக முன்பில்லாததை விட அதிக செல்வாக்கையும் பெற்று வருகிறது அது மட்டும் இன்றி தமிழகத்தில் தற்பொழுது மோடி குறித்த எதிர்ப்பு அலைகளும் குறைந்துள்ளதாக பல கருத்துக்கணிப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த மழை அதனால் ஏற்பட்ட பாதிப்பும் திமுக அரசை மேலும் பின்னடைய வைத்துள்ளது.இப்படி எங்கு பார்த்தாலும் தொடர் பின்னடைவுகளையும் தன் கட்சிக்குள்ளே பல சரிவுகளையும் போட்டிகளையும் பொறாமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் திமுக 2024 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது என்பது ஒரு சவாலான காரியமாக அமைகிறது! இதனால் 20204 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்கொள்வதற்கு மீண்டும் பிரபல வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோரை அழைக்கலாம் என்று யோசனையில் அறிவாலய தரப்பு இருந்ததாகவும் அதற்கான அழைப்புகளை பிரசாந்த் கிஷோருக்கு திமுக தொடர்ந்து கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது ஆனால் அந்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.இதனை அடுத்து IND கூட்டணியும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்ததால் IND கூட்டணி தரப்பும் பிரசாந்த் கிஷோரை வியூகம் அமைக்க அழைத்துள்ளது ஆனால் அங்கும் பிரசாந்த் கிஷோர் செல்லாமல் மறுப்பு தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஏன் பிரசாந்த் கிஷோர் திமுகவையும் IND கூட்டணியையும் மறுத்தார் என்று கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான பதிலாக பிரசாந்த் கிஷோர் கூறிய ஒரு வீடியோ ஒன்று இணையங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, உங்களால் பிஜேபியை தோற்கடிக்க முடியாது, பிஜேபியின் பலம் என்பது என்ன? பிரதமர் மோடி, அமித்ஷா அல்லது RSS போன்ற கலவை அதில் இருப்பது மட்டும் பிஜேபியின் பலம் அல்ல! பிஜேபிக்கென்றே இருக்கும் நான்கு தனித்துவங்களால் அவர்கள் தற்பொழுது தேர்தலை வென்று கொண்டு வருகிறார்கள், முதலில் அவர்கள் கொண்டிருக்கும் அடிப்படை கருத்துகள் என்பது ஹிந்துத்துவா, இரண்டாவதாக திரு மோடி அவர்கள் கொண்டு வந்திருக்கும் மிகை அல்லது புதிய தேசியவாதம், உலக அளவில் இந்தியா தற்போது சந்தித்து வரும் உயரங்கள், வளர்ச்சிகள், பாராட்டுகள், மூன்றாவதாக நேரடி பயனாளிகளை அடைகின்றனர், நான்காவதாக ஒரு அமைப்பும் நிதியையும் கொண்டு வருகின்றனர். இதனால்  IND கூட்டணியாக இருந்தாலும் சரி டி எம் கே வாக இருந்தாலும் சரி பிஜேபியிடம் இருக்கும் நான்கு பலத்தில் மூன்றையாவது வெல்ல முயற்சி செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அவர்களால் பிஜேபியை தோற்கடிக்க முடியும்! ஆனால் அது நடக்குமா என்பது சந்தேகம் என்ற வகையில் அந்த நேர்காணலில் பிரசாந்த் கிஷோர் பேசியது வைரலாக பரவுகிறது.