
கடந்த செப்டம்பர் மாதத்தில் சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் இந்திய விடுதலைப் போரில் ஆர். எஸ். எஸ் பங்களிப்பு என்ற தலைப்பில் எழுதப்பட்ட கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட பிறகு இந்த மாநாட்டிற்கு சூட்டப்பட்டிருக்கும் பெயரே மிகவும் அருமையாக உள்ளது சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சிலவற்றை நாம் ஒழித்து தான் ஆக வேண்டும் ஏனென்றால் அவற்றை எதிர்க்க முடியாது, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றவற்றை நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்து தான் ஆக வேண்டும் அதேபோன்றுதான் சனாதனமும் என சனாதனத்தை குறித்து கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் முன் வைத்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் பேசு பொருளாக மாறி பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பை பெற்று வந்தது. பாஜக தரப்பிலும் பல இந்து அமைப்புகள் தரப்பிலும் அமைச்சர் உதயநிதிக்கு கண்டனங்களும் எச்சரிக்கைகளும் விடப்பட்டது. இருப்பினும் உதயநிதி தனது சனாதன எதிர்ப்பு கருத்தில் பின் வாங்காமல் உறுதியாக இருந்தது திமுகவின் IND கூட்டணியிலும் எதிரொலியை பெற்றது. இந்த நிலையில் உதயநிதிக்கு ஆதரவளிப்பதாக திமுகவின் கூட்டணி கட்சிகளும் திமுகவின் முக்கிய அமைச்சர்களும் சனாதனத்தை எதிர்த்து பேசியதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. அது மட்டும் இன்றி சனாதனத்தை அழிக்க வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சிகள் பேசியது தேர்தலிலும் எதிரொலித்தது. ஆனால் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் பேசிய பிறகுதான் சனாதனம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி உள்ளதாக கருத்துக்கள் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் சனாதனம் குறித்த அந்தணர் சிறுவர் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நான் திருமந்திரம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணிற்கு ஒரு பாடல் இடம் பெற்றிருந்தது, பாமபனிந்த பரமேஸ்வரனுக்கு கவசமா என்று திருமூலர் கூறியுள்ளார். எனக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது என்னடா கற்பனை கடந்த ஜோதி, கருணையே உருவமாகி இருக்கக்கூடிய பரமேஸ்வரனுக்கே கவசமா என யோசித்து குழம்பி மீண்டும் அப்பாடலை படித்தேன் "கங்காளன் பூசும் கவசத் திருநீட்ரை மங்காமல் பூசி மகிழ்வர் யாமாங்கில், கங்கா வினைகளை சாறும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே", என்பது பாடல். அதன் பொருள், பாம்பனிந்த பரமேஸ்வரர் விபூதியை கவசமாக அணிந்திருக்கிறார் அப்படிப்பட்ட விபூதியை யார் ஒருவர் மங்காமல் அதன் தூய்மை குன்றாமல் தினமும் பூசி கொள்கிறாரோ!
அவர்களிடம் எந்த ஒரு வினையும் பாவமும் சேராமல் மகாதேவனின் சரணங்களை பற்றுவார்கள் என்று திருமூலர் கூறியுள்ளார். அதனால திருமூலர் கூறிய வாக்க நாமும் பின்பற்றி மகாதேவனின் சரணங்களை அடைவோம் என்று திருமந்திர பாடலை பாடி அதற்கான அர்த்தத்தையும் முழு விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அந்தணர் சிறுவர். ஒரு வீடியோ மூலம் விபூதி அணிவதன் சிறப்பையும் பயனையும் எடுத்து கூறிய அந்தணர் சிறுவரின் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து இது போல் இளமையிலேயே சனாதன தர்மத்தை எடுத்துக் கூறுவதற்காக நிறைய பேர் கிளம்பி விட்டார்கள் இனி சனாதன தர்மத்தை அளிக்கவே முடியாது எனவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.