24 special

விஜயகாந்தின் இறுதி சடங்கில் நிர்மலா சீதாராமனுக்கு நடந்த அதிர்ச்சி..... வெளிவந்த தகவல்.....!

vijayakanth, nirmala sitharaman
vijayakanth, nirmala sitharaman

தமிழக மக்களால் கேப்டன் என்ற அன்போடும் செல்லமாகவும் அழைக்கப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த புதன்கிழமை அன்று உடல் நலக்குறைவால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரை காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததும் அரசியலில் இது போன்ற ஒரு நல்ல மனிதரையும் கனிவான மனிதரையும் பார்க்க முடியாது என்று இரங்கல் செய்திகளும் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பி இருந்தது. அதோடு பிரதமர் நரேந்திர மோடியும் விஜயகாந்தின் இறப்பு செய்தியை அறிந்தவுடன், திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ்த் திரைப்பட உலகின் ஜாம்பவானான இவரது வசீகர நடிப்புத்திறன் கோடிக்கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது. ஒரு அரசியல் தலைவராக, அவர் பொதுமக்கள் சேவையில் தீவிர அர்ப்பணிப்புடன் செயல்பட்டார், தமிழக அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார்.


அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது.  என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த அவருடன் பல ஆண்டுகளாக  நான் நடத்திய உரையாடல்களை அன்புடன் நினைவு கூர்கிறேன். இந்தச் சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அதுமட்டுமின்றி விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய அரசு தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்து மரியாதை செலுத்தும் படி கேட்டுகொண்டார். அதன்படியே மத்திய நிதி அமைச்சரும் சென்னை வருகை புரிந்து கேப்டனின் இறுதி சடங்கில் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றுள்ளார். முன்னதாக அஞ்சலி செலுத்துவதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்து கிளம்பும் பொழுது நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளரையும் காணவில்லை அவருக்கு நியமிக்கப்பட்டிருந்த வாகனமும் கிளம்பி சென்றது நிதியமைச்சரை கோபப்படுத்தியுள்ளதாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சவுக்கு சங்கர் கூறும்போது, 'தமிழகத்திலிருந்து வட இந்தியாவிற்கு டெபிட்டேஷனிற்கு செல்ல முடியாத நிலையில் நந்தகுமார் ஐஏஎஸ் இடம்பெற்றுள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் விஜயகாந்தின் இறுதி நிகழ்விற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்கு வந்தார், தமிழக உட்பட அனைத்து மாநில அரசுகளிடம் புரோட்டக்கால் என்பது ஒன்று உள்ளது. அதுவே மத்திய அமைச்சர்கள் மாநிலங்களுக்கு வரும் பொழுது அவர்களை வரவேற்று வாகனத்தின் மூலம் அழைத்து சென்று தங்குவதற்கும் ஏற்பாடுகள் என அமைச்சர்கள் மீண்டும் டெல்லி திரும்பும் வரை அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும், இதுவே அவர்களின் பொறுப்பு! பொது துறை செயலாளராக இருக்கும் நந்தகுமாருக்கு இந்த பொறுப்பும் உரியது... 

சென்னைக்கு வந்த நிர்மலா சீதாராமன் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய பின் திரும்பிய பொழுது அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த வாகனம் அங்கு இல்லை! அரசு தரப்பிலோ, இயற்கை உபாதை காரணமாக அருகில் வாகனத்தின் ஓட்டுனர் சென்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது இப்படியே கிட்டத்தட்ட 15 நிமிடத்திற்கு மேலாக நிதியமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார், இருப்பினும் நேரம் ஆகியதால் இவரை பின்தொடர்ந்து வரும் வருமானவரித்துறை வாகனத்தில் ஏறி நிதியமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விமான நிலையத்திற்கு செல்கிறார் . விமானநிலையத்தில் அங்கு நடந்தவற்றை கூறுவதற்காக நந்தகுமார் ஐ ஏ எஸ் நிதி அமைச்சரிடம் பேச முற்பட நீங்கள் எல்லாம் அதிகாரிகளா? என்று சேம ரவுண்டு விட்டுள்ளார் நிதி அமைச்சர்' என்று சவுக்கு சங்கர் நடந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.மேலும்  டெல்லியில் இருந்து இனி வரும் காலங்களில் இதனால் அழுத்தங்கள் வரும் என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.