24 special

எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை..! பாரதபிரதமர் மோடி..!

amitsha and modi
amitsha and modi

குஜராத் : தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாரதபிரதமர் மோடி அந்தந்த மாநிலத்தில் மக்களுக்கான பல நலத்திட்டப்பணிகளையும் பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வைத்து வருகிறார். தமிழ்நாட்டிற்கு விஜயம் செய்த மோடி பலகோடி ரூபாய் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார்.


குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் அட்கோட் நகரில் 200 படுக்கைகள் கொண்ட மல்டி ஸ்பெஷல் மருத்துவமனையை துவக்கிவைத்த பாரத பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார். அப்போது கடந்த எட்டு வருடங்களாக நாட்டுக்கு சேவை செய்கையில் எந்தவித புதுமுயற்சியும் எடுக்கவில்லை என கூறியதோடு மக்களுக்கு தீங்கிழைக்கும் எந்த செயலையும் செய்யவில்லை என உருக்கமாக பேசினார்.

அவர் பேசியதாவது " ஆட்சிக்கு வந்த இந்த எட்டாண்டுகளில் தேசத்திற்கான எனது சேவையில் எந்தவொரு முயற்சியையும் நான் விட்டுவிடவில்லை. உங்களையோ அல்லது இந்தியாவின் கடைக்கோடி குடிமகனையோ பாதிக்குமாறு அவமதிக்குமாறு மக்கள் வெட்கித்தலைகுனியுமாறு எந்த செயலையும் நான் அனுமதிக்கவில்லை. நான் தனிப்பட்ட முறையிலும் செய்யவில்லை.

இந்த எட்டு வருடங்களில் மஹாத்மா காந்தி சர்தார் வல்லபாய் படேல் கனவு கண்ட நவீன இந்தியாவை உருவாக்க நேரமயான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த எட்டு வருடங்களில் ஏழைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் நாட்டிலுள்ள ஏழைகளுக்கு சேவை செய்திருக்கிறோம். 

தொற்றுநோய் காலகட்டத்தில் எந்த ஒரு குடிமகனும் பசியோடு இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். ஏழைகளுக்கு உணவு தானிய இருப்புகளை திறந்து வைத்தோம். ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச தடுப்பூசி செலுத்தினோம். நம் தேசத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் மேம்பாட்டிற்கும் இந்த எட்டுவருடங்களை அர்ப்பணித்துள்ளோம்" என பாரத பிரதமர் மோடி மக்களிடம் உருக்கமாக பேசினார்.