24 special

செயற்கைகோள் தொழில்நுட்பம்...! இந்தியாவுடன் இணைகிறதா சீனா..?

modi and xi jinping
modi and xi jinping

புதுதில்லி : கடந்த ஆகஸ்ட் 2021ல் பிரிக்ஸ் நாடுகளுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்கு விண்வெளி ஏஜென்சிகள் இணைந்து விண்மீன் தொகுப்பை உருவாக்கவுள்ளன. அதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் விண்வெளி தளத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயல்பாடு இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படுத்தவிருப்பதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரிக்ஸ் நாடுகளான இந்தியா,சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய ஆசிய கண்டத்தின் முக்கிய நாடுகள் கடந்த இருதினங்களுக்கு முன்னர் உயர்மட்ட விண்வெளி நிறுவனங்களின் கூட்டத்தை நடத்தியிருந்தது. அதில் பிரிக்ஸ் நாடுகளின் விண்வெளி ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையம் அமைக்கப்பட்ட பின்பு சீனா இந்தியாவுடன் விண்வெளி பாதுகாப்பு பரிமாற்றத்தில் மேலும் ஒருபடி நெருக்கமாகியிருப்பதாக சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்திய செயற்கைகோள்களான ரிசோர்ஸாட் 2 மற்றும் 2ஏ பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே தரவுபகிர்மான தொலைநிலை உணர்திறன் செயற்கைகோளின் மெய் நிகர் மணடலத்தின் ஒருபகுதியாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சீனா ரஷ்யா மற்றும் பிரேசில் இணைந்து உருவாக்கிய கானோபிஸ் வி,  சீனாவின் சியூவான் 2 ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய CBRES ஆல் புதிய ஆறு செயற்கைகோள்கள் மூலம் உணர்திறன் அதிகம் கொண்ட விண்கலம் உருவாக்கப்படும் என சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டில் இஸ்ரோ ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் " உலகளாவிய பருவநிலை மாற்றம், ஆபத்தான பேரழிவுகள் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க பிரிக்ஸ் நாடுகளுடன் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த பெரிய பங்காற்றும்" என தெரிவித்திருந்தது.

வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இந்த பொறிமுறையில் அடுத்தகட்ட முன்னோக்கிய நகர்வை எதிர்பார்க்கலாம்.  இஸ்ரோ கூறியதன் அடிப்படையில் கடந்த 2016ல் ஏவப்பட்ட ரிசர்சோட் 2 செயற்கைகோள் பயிர் உற்பத்தி மதிப்பீட்டு அளவுகள், வனப்பகுதி இடநில அளவு, நிலத்தை கண்காணித்தல் ஆகியவற்றின் தரவுகளை வழங்குகிறது. 

இனி பிரிக்ஸ் மூலம் ஏவப்படும் செயற்கைகோள்கள் கூடுதலாக தாவரங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை கண்காணிக்க பெரிதும் உதவும் என தெரிவித்துள்ளது. இருந்தாலும் 2015ல் விண்வெளி ஒத்துழைப்புக்கான சீன இந்திய கூட்டுக்குழு அமைக்கப்பட்டிருந்தாலும் அந்த ஆணையம் தற்போதுவரை செயல்படாமலேயே இருந்தது. இந்த பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிறகு இருநாடுகளும் விண்வெளி ஒப்பந்தத்தில் அடுத்தகட்ட நகர்வை எட்டியுள்ளன.