அல்லது 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடியில் அடுத்த தலைவலி ! செம்ம டென்ஷனில் மக்கள்! 5 சவரன் வரையிலான தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ள விவகாரத்தில் தற்போது மேலும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னவாறே 5 சவரனுக்கு உட்பட்ட தங்க நகை கடன் தள்ளுபடி அறிவித்து அரசாணையாக வெளியிட்டு இருக்கின்றது தமிழக அரசு. அதாவது கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைகள் மீதான வட்டி மற்றும் அசல் இரண்டு தொகையையும் தள்ளுபடி செய்து, அந்த தொகையை அரசு ஏற்றுக்கொண்டு வங்கிக்கு கொடுத்துவிடும். தற்போது இதில் மேலும் ஒரு பிரச்சனை வெடித்து உள்ளது.
அதாவது கூட்டுறவு வங்கிகளில் போலியான நகையை வைத்தும், ஒரே குடும்பத்தில் பலரும் நகை வைத்து கடன் பெற்றதை சுட்டிக்காட்டி அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என விதி வகுக்கப்பட்டது, இந்நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே நகைக்கடன் பெற்று உள்ளனரா என்ற அடிப்படையில் ஒரு தனி லிஸ்டே ரெடியாகி இருக்கின்றது.
அந்த வரிசையில் தற்போது ஒரு சிலரை மட்டும் செல்போனில் அழைத்து உங்களது நகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. நீங்க வந்து பெற்றுக்கொள்ளலாம் என போன் கால் பறக்கிறது. இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் யாரெல்லாம் ஒரே வீட்டில் தங்க நகை கடன் பெற்று இருக்கிறார்களோ அவர்களுக்கு டென்ஷனாகி இருக்கின்றது.
அதனடிப்படையில் தற்போது தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் 862 பேர் நகைகளை அடமானம் வைத்து இருக்கின்றனர். இவர்களில் 461 பெயர் தங்க நகை கடன் சலுகை பெற தகுதி அல்ல என பெயர் பலகை வைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கூட்டுறவு அலுவலகத்திற்கு கூட்டாக வந்து, போராட்டம் நடத்தி உள்ளனர். மேலும் தேர்தல் வாக்குறுதி என்ன சொன்னீங்க..
இப்ப என்ன பண்றீங்க? அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் ஐ பெரியசாமியை நேர்ல வர சொல்லுங்க... நாங்க சும்மா இருக்க மாட்டோம். ஒரு வீட்டில் இருவர் நகை வைத்து இருந்தால் தள்ளுபடி செய்யமாட்டார்கள் என்றால், ஒருவருக்காவது தள்ளுபடி செய்ய வேண்டும் அல்லவா என தங்களுடைய வாதத்தை முன்வைத்து உள்ளனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, 5 சவரனுக்கு உட்பட்டவர்கள் தான் சலுகை பெற முடியும் என்றால், உண்மையில் எத்தனையோ ஏழை மக்கள் 5 சவரனுக்கு மேலாக வைத்து கூட கடன் பெற்று உள்ளனர். அது போன்றவர்களுக்கு 5 சவரன் வரை தள்ளுபடி செய்து, அதற்கு மேல் உள்ள நகைகளுக்குக்கான அசல் மற்றும் வட்டியை உரியவர்களே பணம் கட்டி மீட்டுக்கொள்வார்கள் என புது கோரிக்கை வைத்து வருகின்றனர் .
அதாவது மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால், 5 சவரனுக்கு உட்பட்டு வைத்தவர்கள் பக்கவா திட்டமிட்டு வைத்து இருப்பார்கள்.ஆனால் பலரும் அவசர ஆத்திரம் கருதி, குடும்ப தேவைக்காக 5 சவரனுக்கு மேலும் அடமானம் வைத்து இருக்கின்றனர் என்பதை குறிப்பிடுகின்றனர். தற்போதகைய நிலவரப்படி, தமிழக அரசின் இந்த அறிவிப்பினால் நகைக்கடன் பெற்ற 16 லட்சம் பேர் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.