Tamilnadu

#BREAKING இனி தான் இருக்கு கச்சேரி பாஜகவில் இணைந்த இருவருக்கும் முக்கிய பொறுப்பு! அண்ணாமலை இனி முன்னிலை!

Annamalai cholavanthan manickam and cholan palanisamy
Annamalai cholavanthan manickam and cholan palanisamy

அதிமுக வழிகாட்டுதல் குழு தலைவர் சோழவந்தான் மாணிக்கம் மற்றும் அமமுகவைவை சேர்ந்த காரைக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சோழன் பழனிசாமி இருவரும் தங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.


சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இன்று பாஜகவில் இணைந்தார்.  திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று  கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இன் தீவிர ஆதரவாளரான சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மாணிக்கம் பாஜகவில் இணைந்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும் சிவகங்கை அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, கடலூர் அமமுக மாவட்டச் செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது, பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் உறுப்பினராக இருந்த மாணிக்கம் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.  கூட்டணி கட்சியாக இருந்தாலும் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் சூழலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தென் மாவட்டங்களில் பாஜக வெற்றி பெற கடுமையான வியூகம் வகுத்துள்ளது, திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சரவணனுக்கு அக்கட்சி மாவட்டம் தலைவர் பொறுப்பு வழங்கியுள்ளது, அதே போல் தற்போது பாஜகவில் இணைந்த மாணிக்கத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட தலைவர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல் சோழன் பழனிசாமிக்கும் முக்கிய பொறுப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது,பழனிசாமி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் இதே பகுதியை சேர்ந்தவர்தான் H.ராஜா எனவே தென்மாவட்டங்களில் ஒன்றான சிவகங்கையில் பாஜக நல்ல வளர்ச்சி அடையும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அடுத்த முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக தீவிரமாக களம் இறங்க இருப்பதாகவும் இனி வரும் காலங்களில் பாஜக தீவிரமாக களப்பணியாற்றும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.