24 special

தெறிக்கவிட்ட சாமானியர் மிரண்டு போன அமைச்சர்..!

Stalin
Stalin

400 ஆண்டு பழமையான மடத்தை போலீசார் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்த நிலையில் அதற்கு எதிராக எந்தவித அரசு அதிகாரமும் இல்லாத சாமானியர் ஒருவர் போலீசார் மற்றும் மந்திரி எவ வேலுவிற்கு எதிராக கொந்தளித்து பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் மிக அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.


உங்கள் அமைச்சரிடம் போய் சொல்லுங்கள் அவர் நினைத்தது ஒரு காலமும் நடக்காது எனவும், முதலில் காவல்துறை எனக்கு உரிமையுள்ள இடத்தில் இருந்து வெளியேறுங்கள் எனவும் ஆக்ரோசமாக பேசி இருக்கிறார், இந்த வீடியோவை பகிர்ந்த பலரும் ஏன் 400 ஆண்டு பழமையான மடத்தை அரசாங்கம் அவசர கதியில் இடிக்க வேண்டும் இதன் பின்னணியில் இருப்பது என்ன?

ஏன் இந்து சமயத்துடன் தொடர்பு உடைய பல தொன்மையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.