24 special

நேருக்கு நேர் பதிலடி கொடுத்த ஐ ஜி பொன்மானிக்கவேல் ..! இளைஞர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

Mk stalin , ponmanickavel
Mk stalin , ponmanickavel

முன்னாள் ஐ ஜி பொன்மாணிக்கவேல் சமீபத்தில் நடந்த கள்ள சாராய மரணம் குறித்து பெண் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கி நேரடியாக பதில் கொடுத்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


குற்றம் நடந்தது தெளிவாக தெரிகிறது கள்ள சாராயம் விவகாரத்தில் சஸ்பென்ட் எல்லாம் கூடாது நேரடியாக காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இது மிக பெரிய குற்றம் நிச்சயமாக குற்றம் செய்து இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக இருந்து இருந்தால் நிச்சயம் இந்த தவறு நடக்க வாய்ப்பே இல்லை.

அரசு சஸ்பென்ட் செய்ய கூடாது, சம்மந்த பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் தற்போது உள்ள நபர்கள் நேர்மையான மனிதர்களாக இருத்தல் வேண்டும் ஆனால் அப்படி யாரும் இருப்பது இல்லை என நேரடியாக வெளுத்து எடுத்து இருக்கிறார் பொன் மாணிக்கவேல்.

கடந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சைவ சமயத்தை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறோம் எங்கள் தெய்வங்களை மியூசியத்தில் அடைத்து வைக்க கூடாது, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் பணத்தில் பொருள்கள் வாங்க கூடாது அவ்வாறு செய்தால் அது பல தலைமுறையை பாதிக்கும், பேர குழந்தைகள் வரை பாதிக்கும்.

தமிழக கோவில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் மக்களால் ஒரு அரசாங்கத்தை தேர்வு செய்யும் போது, கோவில் நிர்வாகத்தை கவனிக்க முடியாதா என்ன? கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் கோவில்களை பால் படுத்திவிட்டன எனவும் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டு பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் தனது மனதில் பட்டதை நேர்மையாக ஒளிவு மறைவின்றி பொன் மாணிக்கவேல் சமீபத்தில் பேசிய கருத்துக்கள் சாமானிய மக்கள் மனதிலும் இடம் பிடித்து இருக்கின்றன. ஒரு சொட்டு கள்ள சாராயம் இல்லாமல் இருந்த தமிழகத்தில் எப்படி போலி மது பானம் வந்தது என பொன் மாணிக்கவேல் எழுப்பிய கேள்வி இளைஞர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.