24 special

யூடுப்பர் இர்பானுக்கு ஏற்பட்ட சோதனை..! மனைவியுடன் வீடியோ போட்டது குற்றமா?

Irfan
Irfan

தனது சொந்த சமூகத்தால் யூடுப்பர் இப்ரான் சமூக வலைதளத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார். சினிமா பிரபலங்களுக்கு இணையாக யூடியூப் பிரபலங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சில யூ டூபர்ஸும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர்.


அந்த வகையில் தமிழகத்தில் யூடியூப் மூலம் மிகவும் பிரபலமானவர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் சினிமா விமர்சனங்களை செய்து வந்த அவர், அதற்கு வரவேற்பு குறைவாக இருந்ததால் பல்வேறு உணவகங்களுக்கு, பல்வேறு ஊர்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து, அதனை வீடியோவாக வெளியிட தொடங்கினார்.

இர்பானின் ஃபுட் ரிவியூ வீடியோக்களுக்கு வரவேற்பு கிடைக்கத் தொடங்கியதால், அதனை பின்பற்றி தொடர்ந்து பல்வேறு வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அங்குள்ள உணவுமுறைகளை பற்றியும் விதவிதமான உணவுகளை சுவைத்தும் வீடியோ வெளியிட்டு, மிகவும் பிரபலம் ஆனார். இவர் வீடியோ'விற்கென யூ ட்யூபில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீப காலமாக இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுடனும் ஃபுட் சேலஞ்ச் செய்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் அதிக அளவில் ரீச் ஆகின. இவருக்கு யூடியூப்பில் 35 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

யூடியூபர் இர்பானுக்கு கடந்த மே 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது திருமணத்திற்காக தமிழகத்தில் இருக்கும் அரசியல், சினிமா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு இர்பான் அழைப்பிதழ் கொடுத்தார். குறிப்பாக திரையுலக பிரபலங்களையும், அரசியல் பிரபலங்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்து திருமணத்தை நடத்தியதால் இவரது திருமணம் இணையத்தில் வெகு பிரபலம். 

இப்படி இர்பான் வெகு விமர்சையாக திருமணம் செய்தது அவர் சமுதாயத்தைச் சேர்ந்த பலருக்கு பிடிக்கவில்லை, 'நமது சமுதாயத்தில் இப்படி ஆ திருமணம் செய்தாலும் வீடியோ கவரேஜ் எல்லாம் எடுத்து ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள்', 'இப்படி செய்யலாமா?,' 'இது நமது மார்க்கத்திற்கே எதிர்ப்பு', 'இது நமது மார்க்கத்துக்கே ஆகாத செயல்', 'நமது மார்க்கத்திற்கு ஏன் இந்த வேண்டாத வேலை?', 'நமது மார்க்கத்தில் இருந்து கொண்டு ஒரு பையன் இப்படி செய்யலாமா?', என இர்பான் திருமணத்தை வைத்து கிட்டத்தட்ட அவரை அவர் சார்ந்த சமுதாயத்தின் எதிர்பாளராகவே மாற்றி விட்டனர். 

'ஒரு கல்யாணம் செஞ்சது குத்தமா?' அதையும் தான் ஒரு பிரபல யூ ட்யூபர் என்ற காரணத்தினால் அதை வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பு செய்தது குற்றமா என இர்பான் அவர்களே புலம்பும் அளவிற்கு அவரது மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போட்டு படுத்தி எடுத்துவிட்டனர். கல்யாணத்துக்கு வந்த வாழ்த்துக்களை விட அவரது மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு கொடுத்த வசவுகளே அதிகம், இதனால் திருமணத்தைக் சந்தோசத்தை கூட கொண்டாட முடியாமல் அமைதி மார்க்கத்தினரால் தாக்கப்பட்டு இர்பான் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

தனது மகிழ்ச்சியை தனது மனைவியுடன் செலவிட கூட சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா இதெல்லாம் தனி மனிதனின் சுதந்திரத்தில் வராதா என பலர் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.