24 special

ISI ட்ரான் மையங்கள்..! இந்திய ராணுவம் கடும் எச்சரிக்கை !

Army
Army

இந்தியா : உலகில் எந்த நாடும் செய்யாத அல்லது செய்யத்துணியாத காரியத்தை செய்வதில் பாகிஸ்தானுக்கு அலாதி இன்பம். அதிலும் தான் பயிற்சி கொடுத்து உருவாக்கிய பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவ விடுவது பாகிஸ்தான் ISIன் வாடிக்கை. அவர்களில் பலரை சொர்க்கத்திற்கு வழியனுப்பி வைப்பது இந்தியராணுவத்தின் வழக்கம்.


இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்த அதற்கென தனியாக ட்ரான் மையங்களை ISI நிறுவியுள்ளதாக இந்திய ராணுவம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. பாகிஸ்தானின் உளவுநிறுவனம் இதுவரை ஆறு ட்ரான் மையங்களை நிறுவியுள்ளதாக ராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சர்வதேச எல்லையில் ஐ.எஸ்.ஐ ஆளில்லா விமான மையங்களை கடத்தல்காரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் உதவியுடன் செயல்பட வைத்துள்ளது. பெரோஸ்பூர் அமிர்தசரஸில் இருந்து பல பாகிஸ்தான் எல்லைப்புற காவல்நிலையங்களில் ஆளில்லா விமானமான டிரோன்களின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக உளவுத்துறை பி.எஸ்.எப் இடம் கூறியதாக பி.எஸ்.எப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"பாகிஸ்தான் ஆயுதங்கள் போதைப்பொருட்கள் மற்றும் வெடிபொருட்களை டம்மி ட்ரான்களை பயன்படுத்துகிறது. கேம்ரான் அருகே எல்லையை கடந்து கடத்தல்காரர்கள் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் உதவியுடன் ட்ரோன்களை பறக்கவிடுகிறார்கள்." என பி.எஸ்.எப். வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் இந்திய பாதுகாப்பு படைகளை ஏமாற்ற பஞ்சாப் போன்ற எல்லையோர மாநிலங்களில் கடத்தல் பொருட்களை கொண்டுசெல்ல இந்த ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.

நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி இந்த 2022ம் ஆண்டில் இதுவரை 52 ஆளில்லா விமான ஊடுருவல் நடந்திருப்பதாக தெரிகிறது. மேலும் இதுவரை 9 ட்ரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்டு அவர்களிடம் வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளதாக பி.எஸ்.எப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 150 கிலோ போதைப்பொருள் இந்திய வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1150 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.