24 special

ராஜ்யசபா தேர்தல்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Rajya Sabha election
Rajya Sabha election

புதுதில்லி : ராஜ்யசபா எம்பிக்கள் பலரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் 15 மாநிலங்களில் 57 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓய்வுபெறும் உறுப்பினர்களில் பல முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பெயரை இடம்பெற்றுள்ளது.


ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாத இடைப்பட்ட காலத்தில் வெவ்வேறு தேதிகளில் உறுப்பினர்கள் ஒய்வு பெறுவதை கவனத்தில் கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களை பூர்த்திசெய்ய வருகிற ஜூன் 10 அன்று தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஓய்வுபெறும் உறுப்பினர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் தலைவர்களான அம்பிகா சோனி, கபில்சிபல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் பகுஜன் சமாஜை சேர்ந்த சதீஸ் சந்திர மிஸ்ரா ஆகிய முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த உறுப்பினர்கள் ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 1 வரை ஓய்வுபெறுகின்றனர்.

உத்திரபிரதேசத்தில் 11 இடங்கள் காலியாக உள்ளநிலையில் தமிழ்நாட்டில் ஆறு இடங்களும் மஹாராஷ்டிராவில் ஆறு இடங்களும் பிஹாரில் இருந்து ஐந்துபேரும் ஆந்திரா,ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவில் இருந்து தலா 4 உறுப்பினர்களும் ஓய்வுபெறுகின்றனர். மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து தலா  உறுப்பினர்களும்,

தெலுங்கானா பஞ்சாப் ஜார்கண்ட் மற்றும் ஹரியானாவில் இருந்து தலா 2 பேரும் உத்தர்காண்டிலிருந்து ஒருவரும் ஓய்வுபெறுகின்றனர். வாக்குப்பதிவுக்கான தேதி மே 24 அன்று வெளியிடப்படவுள்ளது. 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் பரம்பரியப்படி வாக்குப்பதிவு முடிந்த ஒருமணிநேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன் மதம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.