தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமார். இப்போது அவரை தாக்கிய விவகாரம் தான் இணையத்தில் பேசப்படுகிறது இது விளக்கம் கொடுத்த நிலையில் இது ஒரு ட்ராமா என விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் 1995ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில பட வாய்ப்புகள் மட்டுமே வந்த நிலையில் அதன் பிறகு சினிமாவையோ விட்டு விலகி சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட நடிகை வனிதா கலந்துகொண்டவர். அதன் தொடர்ச்சியாக இப்போது ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7வது சீசன் தொடக்கத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் இப்போது மக்கள் மத்தியில் சோர்வாய் ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் நடிகை வனிதா மகளான ஜோவிகாவும் ஒரு போட்டியாளர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்காற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது ரிவியூவை கொடுத்து விட்டு வீடு திரும்புகையில் மர்ம நபர் ஒருவர் தன்னை தாக்கி விட்டார் என்றும் தன் முகத்தில் அடிப்பட்ட நிலையில் உள்ள புகைப்படத்துடன் இணையத்தில் தெரிவித்தார். மேலும், அந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்கிறிங்களா? என்று சிரித்த சத்தம் என் காதில் இன்னும் ஒளித்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். இதற்கு காரணம் யார் என்று தெரியவில்லை ஆனால், பிரதீப் பெயரை தான் அவன் சொல்லி சிரிச்சான் என்பது போல் அவர் பதிவில் கூறியிருந்தார். ஏற்கனவே பிரதீப் ஆண்டனி தான் பிக் பாஸ் சீசனில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியில் அனுப்பியது அந்த நிகழ்ச்சி. இதனால் அவர் தான் ஆட்களை வைத்து திகியிருக்கலாம் என்றும் சந்தேகம் மக்களிடம் எழுந்தது. இதுவரை இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்ததால் மக்களிடம் வனிதா மீதும் சந்தேகித்தனர்.
இந்நிலையில், வனிதா பிரதிப்புடன் பேசியது குறித்து தெரிவித்தது மொத்த சந்தேகத்தையும் தெளிவுபடுத்திவிட்டதாம். அதாவது, 'பிரதீப் நான் எந்த இடத்திலும் உன்னை நேரடியாக புகார் கூறவில்லை. வந்தவர் ஒருவேளை உனக்கு ஆதரவாளர்களாக கூட இருக்கலாம் என்று தான் சொல்லி இருந்தேன் என்று கூறி, அதையும் மீறி நான் ஏதாவது இடத்தில் பேசியது உன்னை புண்படுத்தி இருந்தால் சாரி என்று மெசேஜ் செய்திருந்தேன். அதற்கு பிரதீப் பரவாயில்லை என்று சொன்னதோடு ஜோவிகாவை பற்றி வனிதாவிடம் பேசினாராம். அதில் ஜோவிகா சமீபகாலமாக நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் அவள் கண்டிப்பாக ஜெயிப்பாள் என்றும் பிரதீப் கூறி இருக்கிறார்".
இதற்கு பதில் கூறிய வனிதா, நான் என்னை தாக்கியதை பற்றி அவனிடம் கூறினேன். ஆனால் அவன் ஏதோ என் மகள் விளையாட்டில் நான் சந்தேகப்படுவது போலவே என்னிடம் அவள் ஜெயிப்பாள் என்று கூறுகிறான். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், பிரதீப் வாழ்த்து தான் கூறி இருக்கிறார். நீங்கள் பேசுவதுதான் எங்களுக்கு சந்தேகம் கொடுக்கிறது. நீங்கள் அந்த மர்ம நபர் குறித்து போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை, நீங்கள் இப்படி நடந்து கொள்வது தான் தன மகளுக்காக ஆதரவை தேடி இத்தகைய செயலில் ஈடுபட்டு வருகிறார் என வேறு விமர்சனம் வலுத்து வருகிறது.