செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து தற்போது வரை திமுக தலைமை மீளாத நிலையில் தற்போது பிரதமர் மோடி திமுக குறித்து பேசியதும் குறிப்பாக திமுக வாரிசுகள் குறித்து பேசியதும் அதே நேரத்தில் திமுகவின் சொத்து மதிப்பு குறித்து பொது மேடையில் பேசியதும் திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.
பிரதமர் மோடி நேற்றைய தினம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜகவினர் இடையே பேசும் போது திமுகவிற்கு வாக்கு அளித்தால் அது கருணாநிதி வாரிசுகள் மற்றும் பேரன் பேத்திகள் வாழ உதவும், நீங்கள் பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு உங்கள் சந்ததிகள் வாழ உதவும் என பேசினார்.
அதோடு நில்லாமல் பல்வேறு கட்சிகளின் ஊழல் குறித்து பேசிய பிரதமர், திமுக குடும்பத்திற்கு பல லட்சம் கோடிகள் சொத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். இங்குதான் தற்போது திமுகவிற்கு சிக்கல் உண்டாகி இருக்கிறது.
தற்போது பிரதமர் பேசிய பேச்சிற்கு ஆதாரம் எங்கே தங்களிடம் பல லட்சம் கோடி சொத்து இருப்பதாக பிரதமர் பேசிய தகவல் பொய் என திமுக தலைமை அறிக்கை கொடுக்க வேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது.
ஒரு வேலை பிரதமர் பேச்சை எதிர்த்து திமுக தலைமை அறிக்கை கொடுத்தால் திமுக தலைமை குடும்பத்தின் சொத்து மதிப்பை வெளியிட வேண்டிய கட்டாயம் பாஜகவிற்கு உண்டாகும். இதை தான் பாஜக எதிர் பார்த்து இருப்பதாகவும் தங்கள் சொத்து மதிப்பை நிரூபியுங்கள் என திமுக எதிர் கேள்வி கேட்டால் அதற்கு தயார் நிலையில் பாஜக இருக்கிறதாம்.
இது ஒருபுறம் என்றால் பிரதமர் கருத்தை எதிர்த்தால் சொத்து பட்டியல் வெளியாகும் என்பது ஒரு வகை சிக்கல் என்றால் பிரதமர் திமுக குடும்பத்திற்கு பல லட்சம் கோடி சொத்து இருக்கிறது என சொன்ன தகவலை மறுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உண்டாகும் பிரதமர் சொன்ன தகவல் சரி என்று உறுதி ஆகும் எனவே என்ன செய்வது?
பிரதமர் இப்படி பேசிவிட்டாரே என கன்னத்தில் கைவைத்து அமர்ந்து இருக்கிறதாம் திமுக தலைமை குடும்பம். காலையிலேயே பிரதமர் நேற்று பேசிய பேச்சிற்கு திமுக சார்பில் தனியாக எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுவதா அல்லது எதிர் கட்சிகள் சார்பில் மொத்தமாக அறிக்கை விடலாமா என ஆலோசனையில் மூழ்கி இருக்கிறதாம் திமுக தலைமை குடும்பம்.