விசாரணை மேற்கொள்வதற்காக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது செய்ய முற்படும்பொழுது நெஞ்சுவலி என்று கதறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது இருப்பினும் இந்த முறை செந்தில் பாலாஜியை நாம் விடவே கூடாது என்று அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதற்காக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது என தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் செந்தில் பாலாஜியின் தரப்பினர் அமலாக்க துறையின் ஒவ்வொரு முயற்சியையும் முறியடிக்கும் வகையில் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
செந்தில் பாலாஜி மனைவியும் அமலாக்க துறையின் விசாரணையை காலம் தாழ்த்த வேண்டும் என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர், மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட உள்ளார் என்ற செய்தியை அமலாக்கத்துறை எங்களிடம் கூறவே இல்லை என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொழுதும் அமலாக்கத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தது, நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கிய பிறகும், செந்தில் பாலாஜியிடம் அமலாக்க துறையால் விசாரணை மேற்கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் வருமான வரித்துறை செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் சார்ந்த இடங்களில் மறுபடியும் சோதனையில் ஈடுபட்டது. அதோடு மறுபுறம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி சகோதரர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் போதிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கை பார்த்துக் கொள்வதாகவும் தற்போது நேரில் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் செந்தில் பாலாஜியின் தரப்பில் நீதிபதி என் ஆர் இளங்கோ, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட உள்ளார் என்பதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பும் எங்களிடம் கொடுக்கப்படவில்லை என்றும், இயந்திரத்தனமாக காவலில் அவர் தற்போது வைக்கப்பட்டுள்ளார் என்றும் தனது வாதங்களை முன் வைத்தார்.
இந்த நிலையில் சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் நாங்கள் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட உள்ளார் என்பதை முன்கூட்டியே தெரிவித்து விட்டோம் என்று ஸ்கிரீன்ஷாட்டை ஆதாரமாக வைத்து அமலாக்கத்துறை அதிரடியாக இறங்கியுள்ளது. மேலும் எத்தனை மணிக்கு அந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது என்பதும் அந்த ஸ்க்ரீன் ஷாட்டில் இடம் பெற்று இருக்கிறது என்று மேற்கோள் காட்டி அமலாக்கத்துறை ஆதாரத்தை காண்பித்து செந்தில் பாலாஜி தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த ஸ்க்ரீன் ஷாட்டை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சரியான தருணத்தில் இறக்கப்போகிறது என்று செந்தில்பாலாஜி தரப்பு யாருமே யோசிக்காமல் வசமாக சிக்கிக்கொண்டனர். மேலும் இந்த ஸ்க்ரீன் ஷாட்டில் அமைச்சரின் தம்பி அஷோக்கிற்கும் செந்தில்பாலாஜி கைது பற்றிய தகவல் அனுப்பப்பட்டது ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்க்ரீன் ஷாட் காரணத்தினால் செந்தில் பாலாஜி மனைவிக்கு அவரது கணவரின் கைது பற்றி தெரியும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளது, இது தெரிந்து செந்தில்பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனுவை போலியாக தாக்கல் செய்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது, எப்படியும் இந்த ஒற்றை ஸ்கிரீன் ஷாட் ஒட்டுமொத்த செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு ஆப்பு அடிக்க போகிறது என்றே தெரிகிறது .
மேலும் இந்த வழக்கில் எப்படியாவது செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை நெருங்கவிடாமல் செய்துவிடவேண்டும் என திமுக தரப்பு முயற்சி செய்வதை செங்கல் செங்கலாக அமலாக்கத்துறை காலி செய்து வருவது செந்தில்பாலாஜி தரப்பிற்கு வாழ்நாள் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.