24 special

கே.என்.நேரு அட்ராசிட்டிகள் ...! வெளியான பகீர் ஆடியோ...!

Kn nehru,mk stalin
Kn nehru,mk stalin

கடந்த மார்ச் மாதத்தில் திருச்சி சிவா வீடு அருகே உள்ள இறகு பந்து அரங்கத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அரங்கத்தை திறந்து வைக்க அமைச்சர் கே என் நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் திமுகவின் பேச்சாளர்களின் முக்கியமானவரும் திமுக மாநிலங்களவை குழு தலைவருமான எம் பி சிவா வீட்டு அருகில் தான் இறகு பந்து அரங்கம் உள்ளதாகவும் அந்த அரங்கத்தின் திறப்பு விழாவில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வெட்டு மற்றும் பேனர்களிலும் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை என்று திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே என் நேருவின் காரை மறைத்து கருப்பு கொடி ஏந்தி அமைச்சர் நேருவுக்கு எதிராகவே கோஷம் எழுப்பி உள்ளனர். இதற்குப் பிறகு நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டில் புகுந்து கதவு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர் மேலும் வீடு மீது சோடா பாட்டிலைக் கொண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 


இந்த தாக்குதல் திருச்சி சிவா வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவானாதல் அதனை அடிப்படையாக வைத்து போலீசார் தாக்குதலின் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளும் பொழுது போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயும் நுழைந்த கே என் நேருவின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிருப்தியும் ஏற்படுத்தியது. திமுகவின் உட்கட்சி மோதல் காவல் நிலையத்திற்கு உள்ளும் நடைபெற்றது திருச்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரத்தில் காவல் நிலையத்திற்குள் சென்று தாக்குதல் நடத்தியது பெரும் தவறு என்றும் முதல்வர் ஸ்டாலின் கே என் நேருவை அழைத்து கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது இருப்பினும் அமைச்சர் கே என் நேரு மறுபடியும் ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளார். திருச்சி மாவட்ட ஸ்ரீரங்க தொகுதி எம்எல்ஏ பழனியாண்டிக்கும் அந்நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான நேரு விற்கும் இடையே அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் பிறகு வெள்ளைக் கொடி காட்டப்படுவதும் வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமான கல்குவாரியில் 23 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு நேரு தான்  காரணம் என்று பேசிய ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

அந்த ஆடியோவில், '250 கோடி ரூபாய்க்கு இரண்டு ஏக்கர் இடத்தில் கல் எடுத்தால் மட்டுமே 23 கோடி ரூபாயை அபராதமாக விதிக்க முடியும், இந்த அபராதம் விதித்ததற்கு முழுக்க முழுக்க நேரு தான் காரணம், ஆர்டிஓவிடம் வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியே இந்த அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எம்எல்ஏ பழனியாண்டியை அழிக்கும் நேரு என்று எழுதுங்கள் என்னிடம் கேட்டால் நான் ஆமாம் என்று சொல்வேன். நேரு தன்னைத் தவிர வேறு யாரும் பணக்காரர்களாக கூடாது என்று நினைக்கிறார் எதிர்க்கட்சி ஆக இருந்த பொழுது யாரும் நுழையாது என் குவாரியில் தற்போது ஆளுங்கட்சியாக மாறிய பிறகு நேருவின் தூண்டுதலாலே இப்படி எல்லாம் நடக்கிறது' என்று எம்எல்ஏ பழனியாண்டி பேசியிருந்த ஆடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே இதே போன்ற ஆடியோ வெளியாகி தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் வகித்திருந்த நிதி அமைச்சர் பதவியை இழந்து கட்சியிலும் மரியாதை இழந்து தற்போது தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தும் இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இப்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்ட நிலையில் அமைச்சர் கே என் நேரு பற்றிய ஆடியோ சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் காரணமாக அமைச்சர் கே என் நேருவிற்கும் துறை மாற்றப்படுமா என்று பல கேள்விகளை முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.