24 special

கேள்வி என்றால் இப்படி "கேட்கணும் மூன்றாவது கேள்வி என்ன தெரியுமா ? பாதியில் ஓட்டம் எடுத்த கனிமொழி ஜோதிமணி!

Kanimozhi Jyotimani
Kanimozhi Jyotimani

டெல்லியில் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் கனிமொழி மற்றும் ஜோதிமணி ஆகியோர் ஓட்டம் எடுத்த வீடியோ இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் இதுதான் திராவிட மாடல் ஓட்டமாக என கிண்டல் அடிக்க துவங்கியுள்ளனர்.


பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்தனர். இதயடுத்து பேட்டி அளித்த கனிமொழி கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வருகிறது. இம்மாதம் கிலோ ரூ.40 வரையில் விலை உயர்ந்து ரூ.470 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் பின்னலாடைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தின் நகலை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து வழங்கினோம். மேலும் பல்வேறு முக்கிய கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எங்களது அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக பரிசீலனை செய்வதாக தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதொடர்பாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாகதெரிவித்தார் என கனிமொழி குறிப்பிட்டார். பேட்டியின் போது நிருபர் ஒருவர் மேடம் மதுக்கடைகள் தமிழ்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை அதிமுக ஆட்சியில் அதிகரித்து இருப்பதாக நீங்கள் கூறுனீர்கள் இப்போது திமுக ஆட்சியில் விதவைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதா என நிருபர் கேள்வி எழுப்பினார்.

அவ்வளவுதான் கனிமொழி பதில் கொடுக்க முடியாமல் ஓடி விட்டார், ஆதரவிற்கு அருகில் இருந்த ஜோதிமணி வர மேடம் உங்களிடம் ஒரு கேள்வி இருக்கிறது, பேரறிவாளன் விடுதலை பற்றி என்று கேள்வியை தொடங்கியது உடன் ஓட்டம் எடுக்க தொடங்கினார் ஜோதிமணி, மொத்தத்தில் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுக்காமல் ஓட்டம் எடுத்து இருக்கிறார்கள் மொத்த எம்பி குழுவும்.

இது ஒருபுறம் என்றால் நிருபரிடம் மூன்றாவது ஒரு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது அது வருகிற 26-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி, திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது கருப்பு கொடி காட்டினீர்கள் ஆனால் இப்போது நீங்கள் ஆளும் கட்சி என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்ப இருந்தாராம் அதற்குள் கூட்டத்தை குறைத்து கொண்டு ஓட்டம் எடுத்து இருக்கிறது கனிமொழி தரப்பு என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.

பத்திரிகையாளர் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓட்டம் எடுத்த ஜோதிமணி போன்றோர்தான் பிரதமர் ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை என்று குற்றசாட்டு சுமத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.