திரிபுரா : திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப்குமார் டெப்பின் மனைவி நிதி டெப் CIA மீது பரபரப்பு புகாரை அளித்துள்ளார். தனது கணவர்மீது அபாண்ட குற்றச்சாட்டுக்களை கூறிவருவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பி தங்களது கண்ணியத்திற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடைஞ்சல் விளைவிப்பதாகவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திரிபுரா மாநில முதல்வராக இருந்தவர் பிப்லப்குமார் டெப். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிஜேபி டெல்லி தலைமையுடன் ஏற்பட்ட பிணக்கம் காரணமாக அவர் ராஜினாமா செய்தார் என கூறப்பட்டாலும் பிப்லப்குமார் டெப்அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்நிலையில் அவரது மனைவி நிதி டெப் ஒரு புகார் அளித்துள்ளார்.
நேற்று மாலை மேற்கு அகர்தலா காவல்நிலையம் வந்தடைந்த நிதி டெப் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் " சில ரகசிய உள்ளடக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை எனது வாட்சப்பிற்கு மே 16 அன்று வந்தது. அந்த செய்தியை வெளியிட்டது CIA எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த செய்தி முற்றிலும் தவறானது. அவதூறானது. அந்த வாட்சப் எண்ணே போலியானது என விசாரணையில் தெரியவந்தது.
அங்கீகாரம் இல்லாமல் அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என கண்டறிந்தேன். எனது கணவர் வெளியிட்ட அறிக்கை CIAவுக்கு கூறப்பட்டது என்பது முற்றிலும் தவறானது. காவல்துறை இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அந்த மனுவில் நிதி குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து அகர்தலா மூத்த காவல் அதிகாரின் கூறுகையில் " இந்தியாவில் CIA எனப்படும் புலனாய்வு அமைப்பே இல்லை. அவர் அமெரிக்காவில் உள்ள புலனாய்வுத்துறையை குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. எந்த நாட்டின் புலனாய்வு அமைப்பை குறிப்பிடுகிறார் என்றும் தெளிவாக குறிப்பிடவில்லை" என செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் பிப்லப்குமார் டெப் அடிக்கடி ஏதாவது அறிக்கை விட்டு சர்ச்சையில் மாட்டிக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அறிக்கையை CIA திரட்டியது என்றும் அதை அவரது மனைவிக்கே அனுப்பியது என்றும் கூறியது ஒரு விளம்பரத்திற்காக இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.