24 special

இந்த ஆப் உங்க போன்ல இருந்தா உடனே தூக்கிடுங்க....அவசர செய்தி!

playstore, RBI
playstore, RBI

இந்த உலகம் மொபைல் போனிற்குள் அடங்குவதற்கு முன்பு தொழில் அதிபர்கள், சாமானிய மக்கள், நிறுவனங்கள் என அனைவரும் தங்கள் தேவைக்கு கடன் பெறுவதற்கு வங்கியை அணுகுவார்கள். அப்படி வங்கியை அணுகி தேவையான ஆதாரங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பல சரிபார்ப்புகளுக்கு பிறகு வங்கியிலிருந்து கடன் வழங்கப்படும். ஆனால் தற்பொழுது எல்லாம் மொபைல் போன் இருந்தால் போதும் எல்லாவற்றையும் செய்யலாம் புட் ஆடர் செய்து ஃபுட்டுக்கு பணத்தையும் செலுத்தலாம், பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ண வேண்டும் என்றால் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை இருந்த இடத்தில் மொபைல் போன் மூலமாக செயலியை இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து விடலாம் தூரத்தில் இருப்பவர்களை அருகில் இருந்து பார்ப்பது போல வீடியோகாலில் பேசலாம், பல வகுப்புகளை ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளலாம் தெரியாத இடத்திற்கு செல்லும் வழியையும் தெரியாத மொழியின் அர்த்தத்தையும் தற்பொழுது மொபைல் போன்கள் காட்டுகிறது, பொழுதுபோக்கு நிகழ்ச்சி முக்கிய தேவை என அனைத்திற்கும் தற்போது மொபைல் போன் ஒரு மனிதனின் கட்டாயத் தேவையாகி உள்ளது.


இந்த நிலையில் தற்போது ஆண்ராய்ட் மொபைல் போன் மூலம் எளிதில் கடன் பெறும் வசதியும் பிரபலமாகி உள்ளது. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வீட்டு கடன், திருமண கடன்,  பிஸ்னஸ் கடன், குளிர்சாதன பெட்டிலும் சலவை இயந்திரம் என அனைத்திற்கும் டிஜிட்டலில் கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தும் வழக்கம் வந்துவிட்டது. ஆனால் இந்த வசதி மக்களை பெரும் கடனாளியாகி விடுகிறது! மேலும் இந்த டிஜிட்டல் முறையில் பெறப்படும் கடன்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எந்த ஒரு நிதி சார்ந்த நிறுவனமும் ஆர்பிஐ யிடம் உரிய ஒப்புதல் மற்றும் தனது நிறுவனத்திற்கான அங்கீகாரத்தை பெற வேண்டும் ஆனால் அப்படி ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் செயல்பட்டு வந்த 2000க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள் ஆர் பி ஐ மற்றும் நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படாமல் செயல்பட்டதாகவும் இந்த செய்திகளால் பல கடன் தொல்லை மற்றும் முறைகேடுகளை பொது மக்கள்.சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆர்பியை பொய்யான கடன் செய்திகளை எதிர்த்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அந்த நடவடிக்கைகளின் படி கூகுளில் ஆயிரக்கணக்கான கடன் செயலிகள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் மோசடிகளை மேற்கொண்டு வந்த 4700 செயல்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளோம் என நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதோடு மோசடிகளில் இருந்து மக்களை பாதுகாக்க ஆர்பிஐ கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செய்திகளுக்கு சில விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி மக்களுக்கு கடன் வழங்க எந்த ஒரு செயலியும் நேரடியாக மக்களிடம் சென்றடைவதற்கு முன்பாக ஆர்பிஐ இடம் அனுமதி பெற்ற பிறகு கடனை வழங்க வேண்டும் என்றும் அனுமதி பெற்ற கடன் நிறுவனங்களுக்கு மட்டுமே கடன் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 

மேலும் சைபர் கிரைமும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் டிஜிட்டல் கடன் செயலிகளை கண்காணித்தும் வருகிறது. அப்படி கண்காணிக்கப்பட்டதில் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சுமார் 2,200 ருக்கும் மேற்பட்ட போலி கடன் செயல்களை கடந்த 2022 செப்டம்பர் முதல் 2024 ஜனவரி வரையிலான இடைவெளியில் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளது. ஏனென்றால்  இந்த செய்திகள் பெரும்பாலானவை சீன நாட்டை சேர்ந்ததாகவும் அதிக அளவிலான தொகையை கடனாக வழங்கி மக்களை ஏமாற்றி அதற்குப் பிறகு மிரட்டலில் பண வசூலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்த பிறகே ஆர்பிஐ இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி அப்படி ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயல்கள் ஏதேனும் உங்கள் மொபைல் போனில் இருந்தால் அதை உடனே நீக்க வேண்டும் என்றும் தவறுதலாக கூட இது போன்ற செயல்களை பயன்படுத்தி கடன் பெற வேண்டாம் என்றும் ஒருவேளை கடன் பெற்று பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் அதற்கான புகாரை போலீஸிடம் அறிவிக்கலாம் என்றும் நிதி துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.