கோவில்களை அதிகம் கொண்ட மாநிலமாக திகழும் தமிழகத்தில் திருவண்ணாமலை கிரிவலம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது இந்த கிரிவலத்தை மேற்கொள்ள பல பகுதிகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் சிவ பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலத்தை மேற்கொள்வார்கள். ஏன் என்றால் இந்த கிரிவலத்தை மேற்கொள்ளும் பொழுது அவர்களுக்கு ஞானமும் முக்தியும் கிடைப்பதாகவும் தீராத நோய்கள் வியாதிகள் கூட தீரும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த கிரிவலம் அண்ணாமலையாரின் திருவிளையாடல் இத்தகைய சிறப்பை அடைந்ததாக வரலாறு கூறுகிறது. அதாவது கைலாயத்தில் ஒருமுறை சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடிக்கொண்டதால் உலகம் இருண்டது, இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது, அந்த தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு பரிகாரம் தேடி பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் செய்தார் அப்பொழுது சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்து வரம் என்ன வேண்டும் என்று சிவபெருமான் கேட்கும் பொழுது உங்களை பிரியாத வரம் வேண்டும் என்று பார்வதி தேவி கேட்க அதற்கு நீ என்னை சுற்றிவர வேண்டும் என்று கூறினார்.
உடனே பார்வதி தேவி சிவபெருமானே அண்ணாமலையராக அமைந்திருக்கும் திருவண்ணாமலையை சுற்றி நடக்க ஆரம்பித்தார் இதுவே கிரிவலம் என்று கூறப்படுகிறது திருவண்ணாமலையை பார்வதி தேவி சுற்றி வந்த பிறகு அவர் கேட்ட வரத்தை பார்வதி தேவிக்கு வழங்கியதோடு இனி தங்களை நினைத்து பக்தர்கள் இந்த மலையை சுற்றி கிரிவலம் வந்தால் அவர்களுக்கு வேண்டியவற்றையும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று பார்வதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருவண்ணாமலையை கிரிவலம் வருபவர்களுக்கு பல நன்மைகளையும் ஞானத்தையும் முத்தியையும் சிவபெருமான் அளித்து வருவதாக புராணக் கதைகள் கூறுகிறது.இந்த கதை மற்றும் நம்பிக்கை அனைத்தும் சித்தர்கள் மூலம் பொது மக்களுக்கு பரப்பப்பட்டு பொதுமக்களும் இதை தொடர ஆரம்பித்தனர் பலர் பல நன்மைகளை இந்த கிரிவலத்தின் மூலம் பெற்றதால் பல மன்னர்களும் கிரிவலத்தை தொடர்ந்துள்ளனர் இருப்பினும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த கிரிவலம் வருவது தடைபட்ட பிறகு பாண்டிய மன்னனான வஜ்ரங்கநாதன் என்பவரால் மீண்டும் இந்த கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்று மக்களின் ஆன்மீக நம்பிக்கையாக மாறியது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளப்படும் இந்த கிரிவலம் முழுவதிலும் யாருடனும் பேசாமல் சிவபெருமானை நினைத்துக் கொண்டு அவரது நாமத்தை ஜெபித்துக் கொண்டே கிரிவலம் வரவேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருவண்ணாமலையின் கிரிவலத்தை திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஆக உள்ள ரஜினிகாந்த் என்றுமே தவறியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 108 நாட்கள் கையில் அணையா விளக்குடன் ஒரு பெண் திருவண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. அதாவது அந்தப் பெண்மணியின் கனவில் சிவபெருமான் 108 நாட்கள் அணையாதவிளக்குடன் திருவண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்றும் கிரிவலம் முடியும் வரை அந்த விளக்கு அணிய கூடாது என்றும் கூறியுள்ளதால் அந்தப் பெண் தற்போது திருவண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் கிரிவலத்தை மேற்கொள்ளும் பொழுது மௌன விரதம் மேற்கொண்டு விரதம் இருந்து சிவபெருமானின் நினைத்துக் கொண்டே காலை மாலை என தனது கிரிவலத்தை தொடங்கி பெண்மணி நடந்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக உலா வருகிறது. இவர் சித்தாரா எனவும் வேறு விமர்சங்களை எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள்....