24 special

எங்க புள்ளைங்க இன்னைக்கு சிரிக்குதுன்னா அது உங்களாலதான்..! தமிழிசை சவுந்ததரராஜனை கடவுள் போல் பார்க்கும் குடும்பங்கள்...!

Tamilisai,
Tamilisai,

கோர விபத்தில் சிக்கிய சிறுவர்களின் வாழ்வை காப்பாற்றிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்...! கடவுள் போல் கையெடுத்து கும்பிடும் பெற்றோர்கள்!


கடந்த மாதம் புதுச்சேரி மாநிலத்தில் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் நடந்த பள்ளி சிறுவர்களின் சாலை விபத்து அப்பகுதி மக்கள் மற்றும் சிறுவர்களின் குடும்பத்தினரை சோகத்திற்கு உள்ளாகியது, பள்ளி சிறுவர்கள் வழக்கம் போல ஆட்டோவில் சென் ஜோசப் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதில் சிறுவர்கள் பலத்த காயம் அடைந்தனர் . அனைத்து சிறுவர்களும் 8 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் இந்த விபத்து பேரதிர்ச்சியை அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியது!

விபத்து ஏற்பட்டபோது அருகில் இருந்த பொதுமக்கள் சிறுமிகளை மீட்டு இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரு  சிறுமிகளுக்கு தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுவர்களின் பெற்றோர் அலறி அடித்து மருத்துவமனைக்கு வந்த நிலையில் சிறுவர்களின் நிலையை கண்டு கண் கலங்கினர். 

இந்தநிலையில் காயமடைந்தோரை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ,உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்குஆறுதல் கூறினர். மேலும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்து அந்த குழந்தைகளுக்கு எந்த மாதிரியான சிகிச்சை செய்தால் அவர்கள் பிழைக்க முடியும் என ஆலோசனை நடத்தினார்! மேலும் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றோர்களிடம் பேசுகையில் பெற்றோர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியது பெற்றோர்களுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது! 

மேலும் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து பேசிய போது தமிழிசை சௌந்தரராஜன் அரசு மருத்துவமனையிலேயே உங்கள் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறேன் என்றும் டாக்டர்கள் விரைந்து செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு தயாராக உள்ள நிலையில் குழந்தைகளை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறி அந்த பெற்றோர்களை தேற்றியது மட்டுமல்லால் விரைந்து சிகிச்சை கொடுக்க ஏற்பாடுகளை செய்தார்! 

மேலும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மருத்துவத்துறையில் எந்த மாதிரி சிகிச்சை அளித்தால் குழந்தைகளை ஆபத்தில் காப்பாத்த முடியும் என மருத்துவர்களிடம் பேசி இரண்டரை மணி நேரத்தில் அனைத்து சிகிச்சைகளையும் முடிக்க வைத்தார். மேலும் செய்வதறியாது நின்ற பெற்றோர்கள் பெற்றோர்களிடத்தில் 'பொறுமையாக இருங்கள்' என்று ஆறுதல் கூறி அவர்களையும் அரவணைத்துள்ளார். 

தமிழிசை சௌந்தரராஜனின் ஆதரவும், அவரின் அறிவுரையும் பெற்றோர்களுக்கு தைரியமூட்டி அந்த குழந்தைகளை அவர் கொடுத்த அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை பிழைக்கவைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு நன்றி கூறுவதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையில் சந்தித்துள்ளனர். 

மேலும் தமிழிசை சௌந்தரராஜன் குழந்தைகளின் வருகையை அறிந்து அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.  விபத்து நடைபெற்ற போது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமிகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்ததையும் மேலும் பெற்றோர்களுக்கு வழங்கிய ஆதரவும் அறிவுரையையும் தான் குழந்தைகள் நலம் பெற உதவியாக இருந்தது எங்களால் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று அந்த பெற்றோர்கள் கூறி நன்றி தெரிவித்தனர். 

அரசு மருத்துவமனையில் தமிழிசை சௌந்தரராஜன் மேற்பார்வையில் நடைபெற்ற சிகிச்சையின்மூலம் நலம் பெற்ற குழந்தைகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆளுநர் மாளிகையில் நேரில் சென்று நன்றி தெரிவித்ததுடன் அவர்களின் பெற்றோர் கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டீர்கள்  என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை புகழ்ந்து பேசியது புதுச்சேரி முழுவதும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றோர்கள் அரசு மருத்துவமனையின் மீது வைத்த நம்பிக்கையும் மேலும் சமயோசிதமாக செயல்பட்ட மருத்துவர்களின் பொறுப்புணர்ச்சியையும் பாராட்டினார்....!