சட்டக் கல்லூரி மாணவிகள் என கூறிக்கொண்டு நிரஞ்சனா மற்றும் நந்தினி கடந்த ஆட்சியில் இருந்தே பல போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சென்ற ஆட்சி காலத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி வந்தவர்கள் தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியும் எதிர்த்துப் போராட துவங்கி விட்டார்கள்.
மது கடைகளுக்கு எதிராகவும் சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்போகிறோம், இந்த மாநிலத்தில் மதுக்கடைகள் கூடாது என போர்க்கொடி தூக்கிவிட்டு நந்தினி மற்றும் நிரஞ்சனா தற்போது மெல்ல பாதையை மாற்றி பாஜக அரசுக்கு எதிராக குரல்கொடுக்கிறோம் என்ற பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் மத்திய அரசு வாரா கடன்களை தள்ளுபடி செய்கிறது எனக்கூறி பிரதமர் மோடி அவர்களையும் சம்மந்தப்படுத்தி, பிரதமர் பற்றி அவதூறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து பாஜகவினர் நந்தினிக்கு சமூக வலைதளத்தில் மிரட்டல் கொடுப்பதாக கூறி கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கமலாலய வாசலில் இவர்கள் கோஷமிட்டதை தொடர்ந்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்! மேலும் இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களிலும் மக்கள் இருக்கும் இடத்திலும் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருவதை தற்போது முதன்மை வேலையாக செய்துவருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவிற்கு எதிராக பேருந்து நிலையத்தில் நந்தினி மற்றும் நிரஞ்சனா துண்டு பிரசுரங்களை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். விஷயம் தெரிந்த பாஜக பெண் நிர்வாகி போராட்ட இடத்திற்கு சென்று மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் பதிலுக்கு மாணவிகளும் தாக்கியதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போலீசார் கைது செய்ய முற்படும்போது நந்தினி தகாத வார்த்தையில் போலீஸ் அதிகாரிகளையும் பெண் பாஜக நிர்வாகியையும் திட்டி தீர்த்தார்.
இந்தநிலையில் உதகை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் அந்த கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகை புரிந்தார். இதனை முன்னிட்டு மோகன் பகவத் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நந்தினி மற்றும் சகோதரி நிரஞ்சனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருவரும் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்கு அரசு பேருந்தில் பயணித்தனர். மேலும் இவர்கள் இருவரும் ஊட்டிக்குச் சென்று போராட்டம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் இந்த செய்தி அறிந்த சூலூர் போலீசார் இவர்களை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் மதுரையில் போலீசார் நடத்திய சோதனையில் நந்தினியும் நிரஞ்சனாவும் வசமாக சிக்கினார்கள், அப்போது அவர்கள் இருவரையும் போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் போலீசாரின் பேச்சை இருவரும் கேட்கவில்லை!
உடனே பெண் போலீசாரின் உதவியுடன் இருவரையும் பேருந்தில் இருந்து இறக்கி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதை அறிந்த நந்தினியும், நிரஞ்சனாவும் ஆனந்தி என்ற பெண் காவலாளியின் கன்னத்தில் சரமாரியாக அடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோபமடைந்த போலீசார் இந்த சம்பவத்திற்குப் பிறகு பெண் போலீஸ் அதிகாரி அவர்களின் புகாரின்படி நந்தினி, நிரஞ்சனா இருவரையும் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.பெண் போலீசாரை கடுமையாக தாக்கியதாக இருவரையும் கைது செய்து 15 நாள் சிறையில் அடைத்தனர்.