செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜிதரப்பும்! எப்படியாவது விசாரணைக்காக தன் காவலில் செந்தில்பாலாஜியை எடுத்தாக வேண்டும் என்ற முடிவில் அமலாக்கதுறையும் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்து வந்த நிலையில், மூன்றாம்நீதிபதி கார்த்திகேயன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதி இறுதியாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் அதனால் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என்றுநிரூபிக்கட்டும் மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தகாலத்தை அமலாக்க துறையின் விசாரணை காலமாக கருதக்கூடாது மேலும் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் ஆன பிறகு அமலாக்கதுறையின் விசாரணை காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இதற்கு முன்பு இரு நீதிபதிகள் அமர்வில் தீர்ப்பளிக்கப்பட்ட இரு வேறு தீர்ப்புகளில் இருந்து அமலாக்க துறைக்கு சாதகமான தீர்ப்பை தற்போது மூன்றாம் தரப்பு நீதிபதி அளித்துள்ளதால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆவதற்கு யோசித்து வருவதாகவும் வெளியில் வந்தால் அமலாக்கத்துறை கொக்கி போட்டு தூக்கி விடுமே என்ற பயத்தில் அறிவாலய வட்டாரமும் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படிஇந்த வழக்கில் அமலாக்க துறைக்கு சாதகமான சூழ்நிலை நிலவி வந்தாலும் இந்த தீர்ப்பு வந்த அடுத்த நாளேஅமலாக்கத்துறை கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதாவது உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கின் மேல் முறையீட்டு மனு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாம்நீதிபதியின் தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு சாதகமாக வந்துள்ளதால் செந்தில் பாலாஜி தரப்பு சுப்ரீம் கோட்டில் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தினால் முன்கூட்டியே முந்திக்கொண்டு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தரப்பிற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல்செய்துள்ளது.
மேலும் அந்த மனுவில் தங்கள் தரப்பில் இருக்கும் கருத்துக்களை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அமலாக்க துறை குறிப்பிட்டு இருப்பதாகவும்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகும்அனைத்து தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்முன்பு சமர்ப்பிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கேவியட் மனு அமலாக்கத்துறைக்கு சாதகமாக வந்தால் செந்தில்பாலாஜி தரப்பு இந்த வழக்கில் வேறுஎந்த சட்ட ரீதியான நடவைக்கைகளையும்முன்னெடுக்க முடியாது, இந்த வழக்கு ஒட்டுமொத்தமாகஅமலாக்கத்துறை வசம் சென்றுவிடும் எனசட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்னும்உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடியாமல் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் அமலாக்கத்துறை கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு மீதுஅமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருவதும், இதனை எளிதில் விடப்போவதில்லைஎன்று அமலாக்கத் துறையின் தீர்மானமும் இந்த கேவியட் மனுதாக்கலில் வெளிப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால்செந்தில் பாலாஜியை யார் நினைத்தாலும் காப்பாற்றமுடியாது எவ்வளவு அதிக விலை கொடுத்துவழக்கறிஞர்களை அழைத்து வந்து வாதிட வைத்தாலும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் மாட்டுவதுஉறுதி என்ற நிலை தற்போதுநிலை வருவதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துவருகின்றனர். இதன் காரணமாக அறிவாலயம் முன்னணி வழக்கறிஞர்களைஅழைத்து பேசியும் பயனில்லை என்று தெரிந்து அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.