காஷ்மீர் மாநிலத்திற்கு அரசு முறை பயணம் சென்றுள்ள நாடாளுமன்ற ஐடி குழு அங்கு சுற்றுலாவும் சென்று பொழுதை கழித்து வருவது, சமீபத்தில் எம்.பி-கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் வெளிவந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் திமுக மக்களவை உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் பெண் என்ற காரணத்திற்காக உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி நமாஸ் செய்ய சொல்லி புறக்கணிக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது, தமிழச்சி தங்கபாண்டியன் உடன் சென்ற காங்கிரஸ் எம்.பி, கார்த்தி சிதம்பரம் மசூதியின் உள்ளே சென்று நமாஸ் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் மசூதியின் உள்ளே சென்று நாமஸ் செய்ய அந்த குறிப்பிட்ட மசூதியின் அமைப்பு இடம் கொடுக்கவில்லையாம், இந்த செய்தி இப்போது தமிழகத்தில் உள்ள பெண்ணியவாதிகளுக்கு தெரியவர வாயை மூடி அமைதியாக இருக்கின்றனர்.
ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்ணுரிமை, பெண்களும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என பேசிய பெண்ணிய அமைப்புகள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் இப்போது மசூதியில் பெண்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே நிறுத்தி நமாஸ் செய்வது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
பெண்ணியவாதிகள் என்ற போர்வையில் இந்து மதத்தை கேள்வி எழுப்பும் நபர்கள் யாரும், இது போன்ற செயல்களை கண்டிப்பது இல்லை ஏன் பாதிக்கப்பட்ட நபர்களே வாய் திறப்பது இல்லை எனவும் நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர், இதே போன்று காஷ்மீரில் உள்ள இந்து ஆலயத்தில் கார்த்தி சிதம்பரத்தை மட்டும் உள்ளே அனுமதித்துவிட்டு தமிழச்சி தங்கபாண்டியனை வெளியே நிறுத்து இருந்தால் போராளிகள் பொங்கி இருக்க மாட்டார்களா? என சிலர் தமிழச்சியின் புகைப்படத்திற்கு கீழே கேள்வியாக எழுப்பியுள்ளனர்.
தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் தமிழக அரசு இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து செயல்படும் நிலையில், காஷ்மீரில் பெண் திமுக எம் பி வெளியே நிற்கவைத்து வழிபட அனுமதி அளித்தது உண்மையை என்னவென்று வெளி உலகிற்கு தெளிவாக படம் பிடித்து காட்டி விட்டதாக அரசியல் விமர்சகர் கே கே தெரிவித்துள்ளார்.