24 special

செந்தில் பாலாஜி வீட்டிற்கு படையெடுக்கும் அதிகாரிகள்...! ஜாமீனுக்கு வரும் புது சிக்கல்..?

Senthil Balaji, Ashok kumar
Senthil Balaji, Ashok kumar

அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த வருடம் ஜூன் மாதம் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். உச்சநீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்காமல் மீண்டும் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்து மதிப்பிட்டு வருகின்றனர்


அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது. அதுகுறித்து அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். கடந்த ஆண்டு மே 26ஆம் தேதி செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை மற்றும் கரூர் மாவட்டங்களில் மொத்தம் 40க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய மனுவில் அமலாக்கத்துறை தரப்பில் இன்றும் அவர் இலாகா இல்லாதா அமைச்சராக பொறுப்புள்ளதால் அவருக்கு ஜாமின் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மருத்துவ காரணங்களை கொண்டு அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரினார் அப்போது நீதிபதிகள் இந்த சிகிச்சையை மாத்திரைகள் மூலமே தீர்வு காணலாம் என்று கூகுள் மூலமாக ஆய்வு செய்து  தெரிவித்தனர். இருப்பினும், முன்னதாகவே செந்தில்பாலாஜியின் தம்பி அஷோக் குமார் காட்டிவரும் பங்களா குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பினர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார். அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார் அசோக்குமார்.

அசோக் குமார் தலைமறைவாக உள்ளதால் செந்திலாபாலாஜிக்கு ஜாமின் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூர் நாமக்கல் புறவழிச்சாலை ராம் நகரில் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் இன்றைய தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்யும் பணிகள், இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதானால் தமிழக அரசியலில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. சிறிது நாட்கள் வருமான வரித்துறை சோதனை செய்வதில் ஓய்வு கொடுத்து, தற்போது மீண்டும் அதிரடியாக இறங்கியுள்ளது. அதும் சீனத்தில்பலஜி சிறையில் இருக்கும்போதும் அவரது தொடர்புடைய இடத்திலும் அவரது தம்பிக்கு தொடர்புடைய இடத்திலும் சோதனை செய்வது திமுக வட்டாரமே பதைபதைக்க வைத்துள்ளது.