24 special

இனியும் முதுகில் குத்த நினைத்தால் பதிலடி உறுதி.. ! பல்டி அடித்து அதிமுக எடப்பாடி தரப்பு...!

annamalai , narendramodi , edapadi
annamalai , narendramodi , edapadi

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக குறித்தோ கூட்டணி குறித்தோ யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது அதையடுத்துதான், எங்களிடம் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என கூறிய ஜெயக்குமார் மறுநாள் பாஜக அதிமுக கூட்டணி தொடர்வதாக தெரிவித்தார்.


கடுமையாக விமர்சனம் செய்த செல்லூர் ராஜுவும் அடக்கி பேச தொடங்கினார், இவையெல்லாம் ஒரு புறம் என்றால், பாஜக தமிழக கள நிலவரங்களை இனியும் அமைதியாக வேடிக்கை பார்க்காது என டெல்லி நேரடியாக சொல்லியதுதான் காரணமாக பார்க்க படுகிறது.

பாஜகவில் இருந்து வெளியேறிய கட்சி நிர்வாகிகள் நேரடியாக அதிமுகவில் இணைந்தனர், அதிலும் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர், இதுதான் இப்போது எடப்பாடிக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது, கட்சி என்றால் பலர் வருவார்கள் போவார்கள் அதை பெரிது படுத்த தேவையில்லை அதே நேரத்தில் பாஜகவில் மூன்றாம் கட்ட தலைவர்களை கூட எடப்பாடி மலர் வளையம் கொடுத்து வரவேற்றது உண்மையில் அதிமுக எண்ண ஓட்டம் என்ன என்பதை பாஜக முழுமையாக அறிய உதவி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் டெல்லிக்கு செல்ல நாங்கள் அதிமுகவின் உள் விவாகரங்களில் சசிகலா அதிமுகவை விட்டு சென்றபின் எதிலும் குறுக்கிடவில்லை அப்படி இருந்தும் பாஜகவை விமர்சனம் செய்வது போன்று பலர் வெளிப்படையாக பேசுவது ஒரு புறம் என்றால் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளை நீங்களே சேர்ப்பது என்பது என்ன சிக்னலை கொடுக்க இருக்கிறீர்கள் என்பதை அறியாத அளவிற்கு பாஜக சிறிய கட்சியல்ல,உண்மையில் கூட்டணி பிடிக்கவில்லை என்றால் நேரடியாக இப்போதே சொல்லிவிடுங்கள் அல்லது வெளியேறுங்கள் இனியும் முதுகில் குத்த நினைத்தால் பதிலடி நெஞ்சில் உறுதியாக விழும் என கூறி இருக்கிறதாம் பாஜக. இதயடுத்தே பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டாம் என பல்டி அடித்து இருக்கிறதாம் அதிமுக எடப்பாடி தரப்பு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

தொடர்ச்சியாக பாஜக அதிமுக உறவில் விரிசல் அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்த பல்வேறு செயல்பாடுகளே காரணம் என தமிழக பாஜக நிர்வாகிகள் பல்வேறு புகார்களை அடுக்கி இருக்கிறார்களாம், சமீபத்தில் தமிழகம் வந்த நட்டாவிடம் தமிழகத்தில் ஈரோடு இடைத்தேர்தல் முதற்கொண்டு அதிமுக எடப்பாடி பழனிசாமி நடந்துகொண்ட விதம் என பல்வேறு தரவுகளை கொடுத்து இருக்கிறார்கள்.

விரைவில் மத்திய அமைப்புகள் மூலம் நேரடியாக தமிழகத்தில் மக்களின் மன நிலை என்ன என்பது குறித்து சர்வே எடுக்க இருப்பதாகவும், அதன் அடிப்படையில் கூட்டணியில் மட்டுமின்றி பாஜகவின் அரசியல் செயல்பாடுகளிலும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என அடித்து கூறுகின்றனர் டெல்லி வட்டாரங்கள்.

அதிமுக பாஜக கூட்டணி உடையும் பட்சத்தில் அது ஆளும் திமுக கூட்டணிக்கு சாதகமான போக்கை உண்டாக்கும் என்பதால் எப்படியாவது அதிமுக பாஜக கூட்டணியை உடைக்கும் விதமாக வெளியில் இருந்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தங்கள் பங்கிற்கு ஊடகங்கள் மூலம் விஷயத்தை ஊதி பெரிதாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.