வைரலாகும் வீடியோ...!திமுக பாஜக இடையே நடைபெறும் சமூக வலைத்தள விமர்சனங்கள் இப்போது அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறது, பாஜக தலைவர் அண்ணாமலை மீது வட மாநில தொழிலாளர்கள் விஷயத்தில் மோதலை உண்டாக்கும் வண்ணம் அறிக்கை வெளியிட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யபட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக பெண் நிர்வாகியின் கிண்டல் பேச்சு தற்போது முதல்வரை கலாய்க்கும் விதமாக அமைந்து இருக்கிறது.
நடிகர் விவேக் ஒரு படத்தில் எண்டே மொழி மலையாளம் எண்ட மாநிலம் கேரளா என பேசுவார் அதே போல் விரைவில் தேசிய அரசியலில் ஈடுபட போவதாக கூறும் ஸ்டாலின் விரைவில் பாரத் மாதக்கி ஜெய் என கோசம் போட போகிறார் பாருங்கள் என கிண்டல் செய்யும் விதமாக பேசிய பேச்சுக்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.