முதலில் டிசம்பர் தொடக்கத்தில் சென்னையை கடந்த மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னை பெரும் பாதிப்புகளை சந்தித்தது. சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது குறிப்பிடத்தக்கது இதனால் தமிழக அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதும் மக்களை நேரடியாக பத்திரிகையாளர்கள் முன்பு தமிழக அரசை நோக்கி கேள்விகளை முன் வைப்பதும் முக்கிய செய்திகளாக இடம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் தமிழக அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 4000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மழைக்கு முன்பு 92 சதவீதம் முன்னெச்சரிக்கை பணிகள் முடிந்து விட்டதாக கூறிய அமைச்சர் மழை பாதிப்பிற்கு பிறகு 42 சதவீதம் மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்...ஓஹோ இது தான் திராவிட மாடலோ என்று பல கேலி கமெண்ட்டுகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.
இதனைத் தொடர்ந்து தென்தமிழகம் கடும் மழையை சந்தித்தது. அப்பகுதியிலும் நிவாரண பணிகள் மீட்பு நடவடிக்கைகள் என அனைத்தும் தமிழக அரசு தரப்பில் தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அதிலும் குறிப்பாக தன் அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவரே மழையில் சிக்கி உள்ளார் என்பது கூட தெரியாமல் அவரையும் வெள்ள பாதிப்புகளை ஆராய்வதற்கான பணிகளில் இணைத்தது தமிழக அரசின் அலட்சியத்தை வெளிக்காட்டியது என விமர்சனங்கள் எழுந்தது. இப்படி மழை பாதிப்பு திமுகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு இதனை மொத்தமாக மத்திய அரசு தரப்பில் மாற்றி பழி போட்டது. அதாவது மழை குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் போதிய நிதி எங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் மத்திய அரசின் மீது திமுக குற்றம் சாட அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் கேள்விகளும் தமிழக அமைச்சர்கள் முன்வைத்த கேள்விகளும் பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது அவை ஒவ்வொன்றிற்கும் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் தமிழக அரசின் தலையில் இடியை இறக்கியது. மழையால் மக்கள் பரிதவித்து உண்ண உணவு இன்றி திண்டாடிய நிலையில் தமிழக முதல்வர் ஏன் டெல்லி சென்றார் இதுதான் அவர் தமிழக மக்கள் மீது காட்டும் அக்கறையா? 92 சதவீதத்திற்கும் 42 சதவீதத்திற்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு அமைச்சரை எங்கேயாவது பார்க்க முடியுமா? பன்னிரெண்டாம் தேதியிலிருந்து தென் தமிழகத்தில் இருந்து கன மழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு அறிவிக்கப்பட்டது அதனை அலட்சியப்படுத்தி மக்கள் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ஒரு அமைச்சர் கூட அப்பகுதி இல்லாதது ஏன்? தேசிய பேரிடர் மீட்பு குழு போகும் வரை பாதிக்கப்பட்ட பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நிர்வாகிகளும் அமைச்சர்களும் இல்லை! இதற்கிடையில் நிவாரணம் கேட்ட முதலமைச்சரே அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் டெல்லியில் அமர்ந்து கொண்டார்! என்று திமுகவை அதிர வைக்கும் கேள்விகளை முன் வைத்தார்.
இப்படி ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பை தமிழக அரசு அலட்சியமாக எடுத்துக் கொண்ட தகவல்கள் அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் காதுகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது இதனால் நானே வருகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற எனது இரண்டாம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளாராம். அதாவது திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி இரண்டாம் தேதி திருச்சிக்கு வருகை தர உள்ளார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த முறை பிரதமர் வரும் சமயம் தமிழக பாஜகவினருக்கு தனியாக சில வேலைகளை கொடுப்பார் எனவும், இந்த முறை பிரதமர் வருவது விமான நிலைய விழாவுக்கு மட்டுமில்லை, வேறு ஒரு சில அரசியல் காரணங்களுக்காகவே வருகிறார் என சில தகவல்கள் கசிந்துள்ளன...