24 special

கனிமொழிக்கு கிடைத்த ரகசிய ரிப்போர்ட்.... அதிர்ச்சியில் முதல்வரின் தங்கை...

mk stalin, kanimozhi
mk stalin, kanimozhi

பல வருடங்களாக, மிக தெளிவாக கூற போனால் பல சகாப்தங்களாக பொழியாத மழை தென் தமிழகத்தில் ஒரே நாளில் பொழிந்தது. கனமழையால் போக்குவரத்து மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டது மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் ஓடியது அதனை சமாளிப்பதற்காக வைகை ஆற்றலும் நீர் திறந்து விடப்பட்டது. இருப்பினும் ஏரி குளங்கள் நிரம்பி வழிந்த மழை நீர் ஊருக்குள்ளும் புகுந்து மூன்று முதல் நான்கு அடி வரையில் தேங்கியிருந்தது. அதிலும் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள வணிக வளாகங்கள் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் தரைத்தளம் முழுவதிலும் வெள்ள நீரில் சூழ்ந்து இருந்தது மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏழு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. 


அதாவது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி தென்காசி போன்ற பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 1963ல் பெய்த அதிகபட்ச மலையான 29.2 சென்டிமீட்டர் மழையை விட தற்போது 44.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று பாளையங்கோட்டையில் 1931இல் அதிகபட்சம் வழியாக பதிவான 20 சென்டிமீட்டர் மழையை விட தற்போது அதிக மழை பதிவாகியுள்ளது. இவற்றைவிட தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மழை பொழிந்த 24 மணி நேரத்தில் 95 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் பதிவு என்பது தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்துள்ள பதிவாகும்! 

இவ்வளவு மழை சென்னையில் பெய்திருந்தால் சென்னை முழுவதும் மழை நீரால் மூழ்கி இருக்கும் என்று கூறப்படுகிறது அந்த அளவிற்கான மழை தென் தமிழகத்தில் பொழிந்து அழிவை நோக்கி செல்லாமல் இருந்தாலும் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. மழையால் வெளியவும் செல்ல முடியாமல் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் மக்கள் அடைந்த துன்பத்திற்கு வார்த்தைகளே இல்லை என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட எங்களுக்கு நிவாரண பொருட்களை கிடைக்கவில்லை ஆனால் தமிழக அரசு தரப்பில் நிவாரண பொருட்கள் அங்கு வழங்கப்பட்டது இங்கு வழங்கப்பட்டது என்ற தகவல்கள் மட்டும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது இதில் என்ன நியாயம் என்று மக்கள் கொந்தளித்தனர். இதனால் ஆய்விற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திமுக அமைச்சர்கள் வருகை தரும் பொழுது அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் மூலம் சென்னையை அடுத்து தென் தமிழகத்திலும் பெரும் பின்னடைவை திமுக சந்தித்துள்ளது தெரிய வருகிறது. 

இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதி எம் பி கனிமொழி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பல நிவாரண பொருட்களை வழங்கி வந்தார் அதில் ஒரு பகுதிக்கு சென்ற பொழுது மக்கள் அவரிடம் முறையிட்டு தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர் இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தின் மூலமும் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். மக்களின் குடியிருப்பு பகுதிகள் விவசாய நிலங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இருச்சக்கர வாகனத்தின் மூலமாக ஆய்வை மேற்கொண்ட கனிமொழி தூத்துக்குடியில் அடுத்த முறை எப்படியும் வரும் தேர்தலில் எம்பி பதவியை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஆய்வுப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கனிமொழிக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் ஒன்று பறந்து உள்ளதாம். அதாவது இந்த முறை தூத்துக்குடி தொகுதியில் திமுகவிற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கப் போவதில்லை! தொகுதி மாறுவதே சிறந்தது என்று தகவல் கனிமொழிக்கு ரகசியமாக கிடைத்துள்ளதாம்! அதனால் மழையும் பொருட்படுத்தாமல் இரு சக்கர வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டோம் ஆனால் நம்மை தோற்கடிக்கப் போகிறார்கள் மக்கள் என கனிமொழி புலம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.